இன்று மாலை 6 மணிக்கு 'சர்கார்' கோமளவல்லியின் அடுத்த அதிரடி?

தற்போது வரலட்சுமி தனுஸுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரி. இந்த படத்தில் வரலட்சுமி அதிரடியான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இவரின் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று 6 மணிக்கு வெளியாக உள்ளது.


திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தால் சில காலம் மட்டும் தான் நிலைக்க முடியும், குணச்சித்திர வேடத்தில் நடித்தால் காலம் முழுவதும் நிலைக்கலாம் என்கிற ரகசியத்தை நன்கு தெரிந்து வைத்திருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். 

'போடா போடி' படத்தில் சிம்புவுக்கு நாயகியாக அறிமுகமாகி இருந்தாலும், சில வருடங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்தார். இதைத்தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் 'தாரைதப்பட்டை' படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின் ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் குணச்சித்திர வேடத்திலும் நடிக்க துவங்கினார். 

Latest Videos

அந்த வகையில் இவர் நடித்த  'சத்யா', 'விக்ரம் வேதா' ஆகிய படங்கள் இவருக்கு சிறந்த நடிகை என்கிற பெயரை பெற்று தந்ததோடு இவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது. இந்நிலையில் இவர் கோமளவல்லியாக நடித்து அசத்தி இருக்கும் திரைப்படம், 'சர்கார்' இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த கீர்த்தி சுரேஷை விட விஜய் ரசிகர்கள் பலர் வரலட்சுமியின் நடிப்பு தூள் என பாராட்டி வருகிறார்கள்.

இருப்பினும் இவருடைய பெயரால் சர்கார் படத்தில் சில பிரச்சனைகளும் எழுந்துள்ளது எனலாம். தற்போது வரலட்சுமி தனுஸுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரி. இந்த படத்தில் வரலட்சுமி அதிரடியான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இவரின் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று 6 மணிக்கு வெளியாக உள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் கோமளவல்லி தன்னுடைய அடுத்த அதிரடியை துவங்கிவிட்டார் என ரசிகர்கள் ட்விட் செய்து வருகிறார்கள்.

click me!