சுத்தி வளைக்காம ஸ்ட்ரெய்ட்டா ஜெயலலிதாவையே தாக்குவோம்! கொடநாடு கோபத்தில் விஜய்

By vinoth kumarFirst Published Nov 10, 2018, 3:04 PM IST
Highlights

அ.தி.மு.க.வுக்கு எதிராக சர்கார் கத்தி இவ்வளவு ஷார்ப்பாக தீட்டப்பட, அதன் தயாரிப்பாளரான தி.மு.க. குடும்பத்தை சேர்ந்த கலாநிதி மாறன் காரணமில்லை. முழு காரணமும் ஹீரோ விஜய்யேதான்! என்கிறார்கள்.

கோமளவள்ளி! -நவம்பர் குளிரையும் தாண்டி தமிழகத்தை தகிக்க விட்டிருக்கும் ஒற்றைச் சொல்! முழுக்க முழுக்க ஆளும் அ.தி.மு.க.வை  விரட்டி விரட்டி வெளுத்துக் கட்டியிருக்கிறது சர்கார் சினிமா. தைரியம்தான். அதுவும் இப்போது சீட்டில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியையோ, ஓ.பன்னீர்செல்வத்தையோ இல்லாமல் மறைந்த ஜெயலலிதா மீது ஆத்திரத்தை அள்ளி ஊற்றியிருக்கிறார்கள் படத்தில். 

அ.தி.மு.க.வுக்கு எதிராக சர்கார் கத்தி இவ்வளவு ஷார்ப்பாக தீட்டப்பட, அதன் தயாரிப்பாளரான தி.மு.க. குடும்பத்தை சேர்ந்த கலாநிதி மாறன் காரணமில்லை. முழு காரணமும் ஹீரோ விஜய்யேதான்! என்கிறார்கள். முருகதாஸ் சொன்ன கதையில், ஜெயலலிதாவை விமர்சித்துக் கொட்டிட வாய்ப்புள்ளது என்பதால், திட்டமிட்டே தி.மு.க. பின்னணி பலமுடைய சன்பிக்சர்ஸை விஜய் தேர்ந்தெடுத்தார்! என்கிறார்கள். இந்த யானை பலம் இருந்தால்தான் ஜெயலலிதாவின் இமேஜை தன்னால் டேமேஜ் பண்ணிட முடியும்! என விஜய் திட்டமிட்டே இதை செய்தார்! என்றே தகவல். 

சரி விஜய்க்கு அப்படியென்ன ஜெயலலிதா மீது கோபம்?...என்கிறீர்களா! விஜய் தன் ரசிகர்களின் கூட்டத்தை நம்பி அரசியல் ஆசை வளர்ப்பதை ஜெயலலிதாவா சகிக்க முடியவில்லை. இன்னொரு ரஜினியோ, விஜயகாந்தோவாக விஜய் உருமாறிட கூடாது என்று நினைத்தார். அதனால்தான் அவரது ஆட்சியில் விஜய் படங்கள் வெளியாவதற்கு தலைகீழ் நின்று தண்ணீர் குடிக்க வேண்டி இருந்தது. அதிலும் ‘தலைவா’ பட ரிலீஸின் போது கதறடித்துவிட்டார்கள் தளபதியை.  தலைவா! பட விவகார சமயத்தில் ஜெயலலிதா கொடநாடில் இருந்தார். அவரைப் சந்தித்து, ரிலீஸுக்கு உதவிட கோரி விஜய் நேரடியாக அங்கு சென்றார். 

ஆனால் கோடநாடு பங்களாவில் இருந்து வெகு தூரத்திலேயே அவரது காரை மறித்துவிட்ட போலீஸ், அவரை வெகுதூரம் நடந்தே பங்களா நோக்கி செல்ல வைத்தது. நடந்து சென்ற பிறகும் கூட ‘முன் அனுமதி இல்லாமல் அம்மாவை சந்திக்க முடியாது.’ என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள். விஜய் இப்படி அவமானப்பட்ட விவகாரம் வெளியே பரவியபோது, ‘சீனெல்லாம் சினிமாவில்தான். இப்படி அசிங்கப்பட்டு நிற்கிறாரே’ என்று அவரை அசிங்கப்படுத்திவிட்டார்கள். இது தன் தன்மானத்தின் மீது விழுந்த பெரிய அடியாக நினைத்து பல முறை கொதித்திருக்கிறார் விஜய். 

தலைவா படத்துக்கு மட்டுமில்லை அதன் பின் புலி, தெறி என எல்லா படங்களுக்குமே பஞ்சாயத்தை கூட்டிக் கொண்டே இருந்தது அ.தி.மு.க. இந்த கடுப்பையெல்லாம் தன் மனதில் வைத்து அழுத்திக் கொண்டே இருந்த விஜய், ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் இப்போது அவரை இப்படி பழிவாங்கி இருக்கிறார்.

 

சுத்தி வளைத்து பேசாமல் நேரடியாக ஜெயலலிதாவின் சொந்த பெயரான ‘கோமளவல்லி’யை படத்தில் வில்லி கேரக்டருக்கு வைத்தும், ஜெ.,வை அவரது நெருங்கிய உறவினர்கள் ‘அம்மு’ என்று கூப்பிடுவதை ’பாப்பா’ என்றாக்கியும்...என விமரிசையாக வெச்சு செய்துவிட்டார்கள் சர்காரில். 
ஆக மொத்தத்தில் கோடநாடு கோபத்தை ‘கோமளவல்லி’யில் தீர்த்துக் கொண்டிருக்கிறார் விஜய்! படம் வெளியாகி பிரச்னையாகும், அந்தப் பெயரை மியூட் செய்ய வேண்டி வரும் என்பதெல்லாம் விஜய்க்கும் தெரியும்.

படம் ரெண்டு நாள் ஓடினாலும் போதும் அந்த சீன்களெல்லாம் பிறகு நெட் வழியே பரவி, காலத்தால் அழிக்க முடியாததாகிவிடும்! என்றும் விஜய் திட்டமிட்டார். அது அப்படியே பலித்திருக்கிறது! என்று நெத்தியடியாய் இந்த வில்லங்கத்துக்கு விளக்கம் தருகிறார்கள் விமர்சகர்கள். ஹும் தளபதி பெரிய அரசியல்வாதியாயிட்டார்னு சொல்லுங்க.

click me!