'தலைவர் 170' படத்திற்கு எதிராக வெடித்த சாதி பிரச்சனை! ஆரம்பத்திலேயே.. அளப்பறையை ஆரம்பித்த வன்னியர் சங்கம்!

By manimegalai a  |  First Published Oct 5, 2023, 6:07 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், 170 ஆவது படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில்... இந்த படத்திற்கு எதிராக வன்னியர் சங்கம் போர் கொடி தூக்கியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்கு பின்னர், தற்போது தன்னுடைய 170-ஆவது படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, நேற்று (அக்டோபர் 4)-ஆம் தேதி, கேரள மாநிலம் திருவனந்தபுறத்தில் மிகவும் எளிமையாக பூஜையுடன் துவங்கியது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை மஞ்சு வாரியர், விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன், இயக்குனர் த.செ.ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் தலைவர் 170 படத்தில், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய ஒரே நாளில் வன்னியர் சங்கம் வரிந்து கட்டி கொண்டு இந்த படத்திற்கு போர் கோடி தூக்கியுள்ளது.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகத்தை அவதூறாக சித்தரித்து காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே, இந்த படத்தை புறக்கணிக்க உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல், வன்னியர் சமூகத்தை சிறுமைப்படுத்தும் விதமாகவும், இழிவாகவும் காட்டியதுடன், நமது மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் அவர்களையும் எதிர்மறையான கதாபாத்திரமாக வடிவமைத்ததை கண்டித்து, நாம் அனைவரும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தோம்.  

பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறேன்! மகள் ஜோவிகா பற்றி மனம் திறந்த வனிதா விஜயகுமார்!

ஒட்டுமொத்த வன்னியர் சமூகமும், இதர சகோதர சமுதாயங்களும் எதிர்ப்பு தெரிவித்தும், இதுவரை தான் செய்தது தவறு என நேரடியாக மன்னிப்பு கூட கேட்காதவர் த.செ.ஞானவேல். இத்தகைய போக்கை கொண்டிருக்கும், ஞானவேல் பங்களிப்பில் உருவாகும் எந்த திரைப்படத்தையும் வன்னியர் சமூக மக்கள் ஆதரிக்காமல், ஒற்றுமையாக புறக்கணிக்க வேண்டும் எனவும், அதன்மூலம் நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் எனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!