Leo Trisha Poster: ரத்தம் தெறிக்க.. த்ரிஷாவுக்கு கொல பயம் காட்டிய 'லியோ'..! வெளியான புதிய போஸ்டர்!

By manimegalai a  |  First Published Oct 5, 2023, 1:46 PM IST

இன்று (அக்டோபர் 5) 'லியோ' படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ள நிலையில், த்ரிஷாவின் புதிய போஸ்டருடன்.. இன்று ட்ரைலர் வெளியாவதை படக்குழு நினைவு படுத்தியுள்ளது.
 


தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், படு மாஸாக உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம், அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப் பிரமாண்டமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படம் குறித்த அடுத்தடுத்த சுவாரஸ்ய தகவல்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

இது என்னடா புது குணசேகரனுக்கு வந்த சோதனை! முதல் நாளே கிழிகிழினு கிழித்த ஜனனி! நந்தினியின் கவுண்டர் வேற லெவல்!

'லியோ' படம் குறித்து வெளியாகி வரும் தகவல்கள், ஆடியோ லான்ச் நடக்கவில்லையே என அப்செட் ஆன ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. மேலும் இன்றைய தினம், 'லியோ' படத்தின் ட்ரைலரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில் , இதனை ஒவ்வொரு நாளும் நினைவு படுத்தும் விதமாக வெரைட்டியான போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது படக்குழு. அதன்படி ஏற்கனவே அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோரின் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது த்ரிஷாவின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ரத்தம் தெறிக்க, த்ரிஷா முகத்தில் கொல பயம் தெரிகிறது. இந்த போஸ்டர் தற்போது ட்ரைலர் குறித்த தகவலுடன் வெளியாகி இருந்தாலும், இதுவரை... ட்ரைலர் எத்தனை மணிக்கு வெளியாகும் என்கிற விவரம் வெளியாகவில்லை. த்ரிஷா பயத்தில் கூட அழகாக இருப்பதாக, இந்த போஸ்டரை பார்த்து பல ரசிகர்கள் தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

 

💥🤙. Please unveil the most awaited Trailer release time 😊🙏. https://t.co/hiBCKdhFso

— Rathna kumar (@MrRathna)

 

click me!