புதுச்சேரியில் ஜெயம் ரவி நடித்த இறைவன் படம் பார்க்க வெறும் 5 பேர் மட்டுமே வந்திருந்ததால், தியேட்டர் நிர்வாகம் ஷோவை கேன்சல் செய்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள முருகா தியேட்டரில் ஜெயம் ரவி நடித்த இறைவன் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. அப்போது ஜெயம் ரவி ரசிகர்கள் படம் வெற்றி பெற வேண்டிய கட்டவுட் பேனர்கள் வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். தொடர்ந்து திரையிடப்பட்டு வந்த இறைவன் திரைப்படத்திற்கு குறைவான ரசிகர்கள் மற்றும் பொதுமக்களே திரைப்படத்தை பார்த்து வந்துள்ளனர்.
ஜெயம் ரவி, நயன்தாரா நடித்திருந்தாலும், படத்தின் திரைக்கதை சொதப்பலாக உள்ளதால் இப்படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் புதுச்சேரி முருகா தியேட்டரில் நேற்று இரவு 9.30 மணி காட்சி இறைவன் திரைப்படத்திற்கு ஐந்து பேர் மட்டுமே டிக்கெட் வாங்கியுள்ளனர். மேலும் டிக்கெட் வாங்கிய ஐந்து பேரும் நேற்று இரவு 9:30 மணி காட்சி திரைப்படம் பார்க்க சென்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அப்போது தியேட்டர் நிர்வாகம் 5 பேருக்கு மட்டும் திரைப்படம் திரையிட முடியாது டிக்கெட்டுக்குரிய பணத்தை பெற்றுக் கொண்டு திரும்ப செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஐந்து பேரும் திரைப்படம் பார்க்காமல் வீடு திரும்பியதுடன் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் உள்ள ஜெயம் ரவி ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் 5 பேர் மட்டும் இறைவன் திரைப்படம் பார்க்க வந்ததால் திருப்பி அனுப்பிய தியேட்டர் நிர்வாகம் pic.twitter.com/MNhSjjlr7z
— Asianetnews Tamil (@AsianetNewsTM)மேலும் திரைப்படம் பார்க்க வந்த ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜெயம் ரவி நடித்த இறைவன் திரைப்படம் பார்க்க வந்தேன். தியேட்டர் நிர்வாகம் கூட்டம் இல்லை என்று படத்தை திரையிட மறுத்து விட்டனர். இதனால் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டு வீடு திரும்பியதாக கூறியுள்ளார். இந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Leo Trisha Poster: ரத்தம் தெறிக்க.. த்ரிஷாவுக்கு கொல பயம் காட்டிய 'லியோ'..! வெளியான புதிய போஸ்டர்!