”மேடைக்கு மேடை‘ஜெய் பீம்’என்று முழங்கினால் மட்டும் போதுமா?”...இயக்குநர் பா.ரஞ்சித்தை கிழித்துத் தொங்கவிடும் வன்னி அரசு...

Published : Apr 05, 2019, 11:07 AM ISTUpdated : Apr 05, 2019, 11:28 AM IST
”மேடைக்கு மேடை‘ஜெய் பீம்’என்று முழங்கினால் மட்டும் போதுமா?”...இயக்குநர் பா.ரஞ்சித்தை கிழித்துத் தொங்கவிடும் வன்னி அரசு...

சுருக்கம்

இயக்குநர் கரு.பழனியப்பன் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளனுக்கு ஆதரவாக பிரச்சாரத்துச் சென்றிருந்த நிலையில், வெறுமனே சால்வை மட்டுமே அணிவித்து விட்டு எஸ்கேப் ஆன இயக்குநர் பா. ரஞ்சித்தை தனது முகநூல் பக்கத்தில் கடுமையாகத் தாக்கியிருக்கிறார் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு.

இயக்குநர் கரு.பழனியப்பன் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளனுக்கு ஆதரவாக பிரச்சாரத்துச் சென்றிருந்த நிலையில், வெறுமனே சால்வை மட்டுமே அணிவித்து விட்டு எஸ்கேப் ஆன இயக்குநர் பா. ரஞ்சித்தை தனது முகநூல் பக்கத்தில் கடுமையாகத் தாக்கியிருக்கிறார் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு.

இதுகுறித்து தனது முகநூல் பதிவில் எழுதியுள்ள வன்னி அரசு...இயக்குனர் கரு.பழனியப்பன் பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்துவது ஒன்றே தமிழர்களின் பாதுகாப்பு என்ற இலக்கோடு இந்த தேர்தலில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.

இன்று சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட திருமுட்டம் பகுதியில் தலைவர் எழுச்சித்தமிழரை ஆதரித்து பரப்புரை செய்வதற்காக வந்திருந்தார்.விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் துணைப்பொதுச்செயலாளர் பாலாஜி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களுடன் சென்று வரவேற்றோம்.

தலித்துகள் எல்லோரும் தனியாக நின்று வெற்றி பெற்று விடலாம் என்று எந்த உதாரும் விடவில்லை. ஜெய்பீம் என்று மேடைமேடைக்கு ஏமாற்றவில்லை. ஆனாலும் சிதம்பரம் தொகுதியில் தலைவர் தொல்.திருமாவளவன் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று களத்தில் இறங்கி பரப்புரை  செய்ய வந்திருக்கும் இயக்குனர் கரு.பழனியப்பன் அவர்களை பாராட்டுவோம் ...வாழ்த்துவோம்...’ என்று தனது பதிவில் நேரடியாகவே இயக்குநர் பா.ரஞ்சித்தை விளாசியிருக்கிறார் வன்னி அரசு.

சிதம்பரம் தொகுதி வேட்பாளராக தொல். திருமா அறிவிக்கப்பட்டபோது இயக்குநர் பா.ரஞ்சித் நேரில் சென்று சால்வை போர்த்தியதால் இரு தரப்பினரும் சமாதானமாகிவிட்டார்கள் என்று கருதப்பட்ட நிலையில் வன்னி அரசின் இப்பதிவு சிறுத்தைகள் மற்றும் பா.ரஞ்சித் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பொறுமையை சோதிக்கப்போகிறாரா விஜய்...? ஜன நாயகன் ரன் டைம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
டிஸ்சார்ஜ் ஆகும் ஈஸ்வரி... களத்தில் இறங்கி சம்பவம் செய்ய தயாராகும் அறிவுக்கரசி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்