Jovika Video: அசிங்கப்பட்ட மகள் ஜோவிகாவுக்காக...களத்தில் இறங்கிய தந்தை ஆகாஷ்! வனிதா வெளியிட்ட வீடியோ வைரல்!

Published : Oct 08, 2023, 03:50 PM IST
Jovika Video: அசிங்கப்பட்ட மகள் ஜோவிகாவுக்காக...களத்தில் இறங்கிய தந்தை ஆகாஷ்! வனிதா வெளியிட்ட வீடியோ வைரல்!

சுருக்கம்

நடிகை வனிதா விஜயகுமார், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்... ஜோவிகாவின் தந்தை அனுப்பியதாக கூறி, அவர் தமிழில் சரளமாக வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி, அக்டோபர் 1-ஆம் தேதி மிகவும் கோலாகலமாக துவங்கியது. கடந்த 6 சீசன்களில் இல்லாத வகையில், இந்த சீசனில் புதுமையான செட்டப் மற்றும் வித்தியாசமான டாஸ்குகள் மூலம், சுவாரஸ்யமாக்கி உள்ளனர். அதே போல் பிக்பாஸ் முதல் சீசனில் மட்டுமே முதல் வாரத்திலேயே போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்து வெளியேற்றப்பட்டார். 

இதை தொடர்ந்து அடுத்தடுத்து ஒளிபரப்பான 5 சீசன்களில், நாமினேஷன் படலம் இரண்டாவது வாரத்தில் தான் துவங்கியது, ஆனால் இந்தமுறை.. முதல் வாரத்திலேயே ஆட்டம் சூடுபிடித்தது மட்டும் இன்றி முதல் வாரத்திலேயே எலிமினேஷனும் நடைபெற உள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலில் முதல் வாரத்திலேயே, பிரபல மாடலும், நடிகையுமான அனன்யா ராவ் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மிகவும் உற்றுநோக்கும் போட்டியாளராக மாறியுள்ளார் ஜோவிகா. இவருக்கு வெளியே இருந்து, வனிதாவும் தன்னால் முடிந்த வரை முட்டு கொடுத்து வருவதால், மற்ற போட்டியாளர்களை விட, ஜோவிகா அதிகம் கவனிக்க படுபவராக உள்ளார்.  எனவே தான் படிப்பு விஷயத்தில் ஜோவிகா மற்றும் விசித்ரா இடையே நடந்த, காரசாரமான விவாதம் அதிகம் கவனிக்கப்பட்டது . கமல்ஹாசன் இதுபற்றி என்ன கருத்து கூறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்டும் படாமல் இந்த விஷயத்தை மேலோட்டமாக பேசி முடித்தார்.

விசித்ரா - ஜோவிகா இடையே படிப்பு குறித்த விவாதம் செல்லும் போது, விசித்ரா எங்க தமிழ் நீ எழுது பார்க்கலாம் என வார்த்தையை விட்டார். அதற்கு ஜோவிகா, எனக்கு அப்பா - அம்மா எழுத தெரியும், தமிழில் கொஞ்சம் படிக்க தெரியும் என கூறினார். ஆனால் ஆங்கிலத்தில் மிகவும் நன்றாக பேசுவேன் என கூறி இருந்தார். 

இப்படியெல்லாம் நடக்குமா? அரியவகை பிரச்சனையால் அவதிப்படும் பிக்பாஸ் ரக்ஷிதா..! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

இதை தொடர்ந்து ஜோவிகாவின் தந்தை தனக்கு அனுப்பிய வீடியோ என கூறி, வனிதா விஜயகுமார் தற்போது ஜோவிகா, தமிழில் கவிதை ஒன்றை சரளமாக வாசிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மகளை தமிழ் தெரியாது என அசிங்கப்படுத்தியதும், வனிதாவை தொடர்ந்து, அவரின் தந்தை ஆகாஷும், இப்போது காலத்தில் இறங்கி விட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

முத்துவுக்கு வில்லியாக மாறும் மீனா... கிரிஷை பகடைக்காயாக யூஸ் பண்ணும் ரோகிணி - சிறகடிக்க ஆசை அப்டேட்
அறிவுக்கரசியின் பிளானை வாஷ் அவுட் பண்ணிய தர்ஷினி... முல்லைக்கு விழுந்த தர்ம அடி - எதிர்நீச்சல் தொடர்கிறது