Trisha: உச்சகட்ட மகிழ்ச்சியில்.. அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட த்ரிஷா!

By manimegalai a  |  First Published Oct 8, 2023, 1:16 PM IST

நடிகை த்ரிஷா, தற்போது 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பில் இருந்தபடி வீடியோ வெளியிட்டு தன்னுடைய 'ரோட்' படத்தின் வெற்றிக்கு நன்றி கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 


நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன் 1, மற்றும் 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அடுத்தடுத்த படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். அதன்படி, தளபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம், இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக தற்போது தல-க்கு ஜோடியாக 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, அபுதாமியில் நடந்து வருகிறது. அக்டோபர் 4-ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் த்ரிஷா, அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ள, திரில்லர் படமான 'தி ரோட்' வெள்ளிக்கிழமை அன்று வெளியான நிலையில் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. 

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த படத்தின் வெற்றியால் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ள நடிகை த்ரிஷா , தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது.. "எல்லோருக்கும் வணக்கம்! எல்லோரும் நல்ல இருப்பீங்கனு நம்புறேன்... எதிர்பாராத விதமாக என்னுடைய ரோட் திரைப்படம் ரிலீஸ் ஆகும் போது நான் ஊரில் இல்லை. படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் உள்ளேன். உங்களின் அன்பை நான் இங்கு வரை உணர்கிறேன். அதே போல் உங்களின் ரிவியூஸ், மற்றும் போஸ்ட் என்னை உற்சாகப்படுத்தியுள்ளது.

இப்படியெல்லாம் நடக்குமா? அரியவகை பிரச்சனையால் அவதிப்படும் பிக்பாஸ் ரக்ஷிதா..! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

மீடியா மற்றும் பிரஸ் மக்கள் என்னுடைய படத்தை சப்போர்ட் செய்ததற்கு நன்றி. தொடர்ந்து நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகிறீர்கள். இந்த நேரத்தில் என்னுடைய நண்பர்கள், நலன் விரும்பிகள், ரசிகர்கள் போன்ற அனைவருக்கும் நன்றி. படம் பற்றி வெளியாகும் அனைத்து விமர்சனங்களையும் படித்து வருகிறேன். எனக்கு சென்னையில் இருக்க வேண்டும் என மிகவும் ஆசையாக உள்ளது என, இந்த வீடியோவில் த்ரிஷா தெரிவித்துள்ளார்.

pic.twitter.com/uBkNdrW82C

— Trish (@trishtrashers)

 

click me!