"இத நீ ஆடியோ லாஞ்சில் சொல்லியே ஆகணும்".. லோகேஷுக்கு தளபதி விஜய் போட்ட கண்டிஷன் - அவரே சொன்ன சீக்ரெட்!

By Ansgar RFirst Published Oct 7, 2023, 11:19 PM IST
Highlights

தளபதி விஜய் நடிப்பில் வருகின்ற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ள திரைப்படம் தான் லியோ. பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்கள், நடிகைகளை கொண்டு லியோ திரைப்படம் வெகு பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ள நிலையில் வருகின்ற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. 

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்கள் காரணமாக அந்த நிகழ்ச்சி நடைபெறுவது தடைபட்டது. இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்பட படப்பிடிப்பின் போது நிகழ்ந்த பல்வேறு விஷயங்களை குறித்து மனம் திறந்துள்ளார். 

முதல்வரோட பேத்தி நானு; என்னை கட்டாயப்படுத்தி தான் அஜித்துக்கு ஜோடியா நடிக்க வச்சாங்க- பிரபல நடிகை பகீர் பேட்டி

மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தளபதி விஜய் அவர்கள், ஸ்கிரிப்ட் பேப்பர் கொடுக்காமலே படத்தை எடுத்து முடித்து விட்டதாக கூறி லோகேஷ் கனகராஜை கிண்டலடித்தார். ஆனால் இந்த முறை ஒட்டுமொத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் பேப்பரை விஜயிடம் கொடுத்திவிட்டாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். 

இதை கண்டு ஆச்சர்யப்பட்டுப்போன தளபதி விஜய், இந்த அதிசயத்தை நீ இசை வெளியீட்டு விழாவில் மக்கள் மத்தியில் சொல்லியே ஆகவே வேண்டும் என்றும் அன்பு கட்டளையிட்டுள்ர். ஆனால் அதற்கு வாய்ப்பு அமையாமல் போகவே, அவர் கலந்துகொண்ட நேர்காணலில் இந்த விஷயத்தை சொல்லி தளபதி யிட்ட அன்பு கட்டளையை நிறைவேற்றியுள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தொடர்ந்து பேசிய இயக்குனர் லோகேஷ், லியோ படத்திற்கு முதலில் ஆண்டனி என்று தான் பெயர் வைக்க முடிவு செய்ததாகவும். ஆனால் லியோ என்ற பெயர் நன்றாக பொருந்திய நிலையில், அதையே படத்திற்கு வைத்ததாவும் கூறியுள்ளார். இருப்பினும் ஆண்டனி என்ற பெயரை விட மனமில்லாமல், சஞ்சய் தத் அவர்களுக்கு அந்த பெயரை வைத்தாராம்.

பிக் பாஸ் 7.. எலிமினேட் ஆகப்போவது அனன்யா இல்லையாம்.. அந்த நடிகர் தானாம்? - இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!

click me!