கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் துவக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக நகர்ந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக பிரபல நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் ஒரு சிறந்த போட்டியாளராக மாறியுள்ளார் என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் நடிகை விசித்ராவும், வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமாரும் கல்வியை பற்றி விவாதித்துக் கொண்டது தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறியுள்ளது என்றே கூறலாம். இதில் மூத்த நடிகை விசித்ரா முன்வைத்த கருத்து என்னவென்றால், அடிப்படை கல்வி என்பது மிகவும் முக்கியமானது. அதனால் 12-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிடு என்று ஜோவிகாவுக்கு அட்வைஸ் கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
விசித்திர கூறியது ஒருவகையில் நலத்திற்கு தான் என்றபோதும், அதனை அவர் ஜோவிகாவிடம் கூறிய விதம் தவறாக அமைந்தது. இதையடுத்து பேசிய ஜோவிகா தனது கல்வி பற்றி பேசவேண்டாம் என விசித்ராவிடம் கூறியும் அவர் திரும்ப திரும்ப பேசியுள்ளார். எனக்கு படிப்பு வரல அதனால் தான் நான் 9-ம் வகுப்போடு நிறுத்திவிட்டேன். என்னைப்போல் ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களுக்காக தான் நான் இங்கு வந்திருக்கிறேன் என்று பேசினார்.
இது மிகப்பெரிய சண்டையாக மாற, இருவரும் கடும் வாக்குவாதத்தில் இறங்கினர். பிக் பாஸ் வீட்டில் பலர் ஜோவிகாவிற்கு சப்போர்ட் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவில் இருவரின் சண்டை குறித்து அவர்கள் இருவரிடமும் பேசியுள்ளார் உலக நாயகன் கமல் அவர்கள்.
சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கமல்ஹாசன் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தோன்றி பேசுவது இயல்புதான். அப்படி பேசிய கமல்ஹாசன், விசித்ரா சொன்ன விஷயம் தவறல்ல, இது வெறும் ஜெனெரேஷன் கேப் என்று கூறினார். அதே போல படிப்பை கஷ்டப்பட்டு தான் படிக்கச் வேண்டும் என்று இல்லை, இஷ்டப்பட்டு படிக்கவேண்டும் என்று ஜோவிகாவை சமாதான படுத்தும் வகையிலும் பேசினார்.