வசமாக மாட்டிக்கொண்ட வனிதா..! 5 மணிக்கு ஒப்புதல் வாக்கு மூலம்..!

Published : Jul 03, 2019, 03:36 PM IST
வசமாக மாட்டிக்கொண்ட வனிதா..! 5 மணிக்கு ஒப்புதல் வாக்கு மூலம்..!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களும் ஒருவரான வனிதா, தனது 3 ஆவது மகளான ஜெனிதாவை பார்த்துக்கொள்ளாமல் யாரிடமோ ஒப்படைத்து விட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களும் ஒருவரான வனிதா, தனது 3 ஆவது மகளான ஜெனிதாவை பார்த்துக்கொள்ளாமல் யாரிடமோ ஒப்படைத்து விட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார் என அவருடைய  இரண்டாவது கணவரான ஆனந்த் ராஜ் தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்து, காவலரை தன்னுடனே சென்னைக்கு அழைத்து இன்று காலை பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

ஆனந்த் ராஜ் உடன் child welfare officer மற்றும் தெலுங்கானா காவல் ஆய்வாளர் ஒருவரும் நசரத் பேட்டை காவல் நிலையத்தில் நேற்று மாலை முதல் காத்திருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் இடம், நசரத் பேட்டை எல்லைக்கு உட்பட்டது என்பதால், இந்த விவகாரம் தொடர்பாக, நசரத்பேட்டை காவல் ஆய்வாளரிடம் உதவியை நாடி உள்ளனர் ஆனந்த் ராஜ் மற்றும் அவர் அழைத்து வந்த தெலுங்கானா போலீசார்.

ஆனால் புகாரின் அடிப்படையில், வனிதாவை விசாரணை நடத்தியே ஆக வேண்டும் என தெலுங்கானா  போலீசார் உறுதியாக இருந்ததால், இன்று வணிதாவிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன் படி, இன்று மாலை 5 மணிக்கு, வனிதாவின் மகளை வரவைத்து, ஒப்புதல் வாக்கு மூலம் வாங்க உள்ளனர். 


 
தாயுடன் வசிப்பதா.? அல்லது தந்தையுடன் வசிக்க விருப்பமா..? என ஒப்புதல் வாக்கு மூலம் பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படியே, ஜெனிதா யாருடன் வசிக்கலாம் என்பதை உறுதி செய்ய முடியும் என்ற தகவல் கிடைத்து உள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?