தமிழ் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியில் பதற்றம்..! தெலுங்கானா போலீஸ் கடும் வாக்குவாதம்..!

Published : Jul 03, 2019, 12:10 PM IST
தமிழ் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியில் பதற்றம்..! தெலுங்கானா போலீஸ் கடும் வாக்குவாதம்..!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களும் ஒருவரான வனிதா, தனது 3 ஆவது மகளான ஜெனிதாவை பார்த்துக்கொள்ளாமல் யாரிடமோ ஒப்படைத்து விட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார் 

தமிழ் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியில் பதற்றம்..! தெலுங்கானா போலீஸ் கடும் வாக்குவாதம்..! 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களும் ஒருவரான வனிதா, தனது 3 ஆவது மகளான ஜெனிதாவை பார்த்துக்கொள்ளாமல் யாரிடமோ ஒப்படைத்து விட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார் என அவருடைய  இரண்டாவது கணவரான ஆனந்த் ராஜ் தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்து, காவலரை தன்னுடனே சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். 

ஆனந்த் ராஜ் உடன் child welfare officer மற்றும் தெலுங்கானா காவல் ஆய்வாளர் ஒருவரும் நசரத் பேட்டை காவல் நிலையத்தில் நேற்று மாலை முதல் காத்திருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் இடம், நசரத் பேட்டை எல்லைக்கு உட்பட்டது என்பதால், இந்த விவகாரம் தொடர்பாக, நசரத்பேட்டை காவல் ஆய்வாளரிடம் உதவியை நாடி உள்ளனர் ஆனந்த் ராஜ் மற்றும் அவர் அழைத்து வந்த தெலுங்கானா போலீசார்.

ஆனால் புகாரின் அடிப்படையில், வனிதாவை விசாரணை நடத்திய ஆக வேண்டும் என தெலுங்கானா போலீசார் உறுதியாக உள்ளனர். அதே வேளையில், பிக்பாஸ் நிகழ்ச்சி விதிகளின் படி அவரை தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற முடியாது. இருந்தாலும் அரெஸ்ட் வாரண்ட் இருந்தால் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து  வனிதாவை அழைத்து  செல்ல முடியும் என்கிறார் வனிதாவின்  வழக்கறிஞர் ஸ்ரீதர். இந்த விவகாரம் தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வணிதாவிடம் விசாரணை நடத்தியே ஆக வேண்டும் என, பிக்பாஸ் வீட்டிற்கு வெளியில் போலீசார் காத்திருக்கின்றனர். உள்ளே செல்லஅனுமதி வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், வனிதாவின் வழக்கறிஞர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உள்ளார். இதில் உள்ள சட்ட சிக்கல் என்ன..? தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அவரிடம் விசாரணை நடத்த முடியுமா என்ற விவரம் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்
ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?