bigg boss ultimate எம்மாடி..முதல் நாளே குட்டையை குழப்பும் வனிதா..சுடசுட வெளியான ப்ரோமோ ..

Kanmani P   | Asianet News
Published : Jan 31, 2022, 02:38 PM ISTUpdated : Sep 25, 2025, 08:12 PM IST
bigg boss ultimate எம்மாடி..முதல் நாளே குட்டையை குழப்பும் வனிதா..சுடசுட வெளியான ப்ரோமோ ..

சுருக்கம்

இன்றும் முதல் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட்டில் முதல் ப்ரோமோ வெளியானது..அதில் சுவாரஸ்ய கேள்விகளுக்கு ஆம் என்றால் குடிக்க வேண்டும்.. இல்லை என்றால் கடிக்க வேண்டும் என கூறப்படுகிறது.. வழக்கம் போல இந்த  

 தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேவரைட் ஷோவாக மாறி உள்ளது பிக்பாஸ். இதுவரை இந்நிகழ்ச்சி தமிழில் 5 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது இந்நிகழ்ச்சி புதிய பரிமாணத்தில் ‘பிக்பாஸ் அல்டிமேட்’ என்ற பெயரில் ஓடிடி-க்காக பிரத்யேகமாக தயாராகி உள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். 48 நாட்கள் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.  

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு அவர்களின் பாப்புலாரிட்டி மற்றும் அனுபவத்தை பொறுத்து சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த சீசனில் அதிகம் சம்பளம் பெறுவது வனிதா மற்றும் சினேகன் தான், இவர்களுக்கு ஒரு நாளைக்கு 45 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறதாம். இதையடுத்து தாடி பாலாஜிக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.40 ஆயிரமும், ஜூலிக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.30 ஆயிரமும் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்களைத் தவிர்த்து எஞ்சியுள்ள 10 போட்டியாளர்களுக்கும், அவர்கள் இதற்கு முன் கலந்துகொண்ட சீசனின் போது வழங்கப்பட்ட தொகையே சம்பளமாக வழங்கப்படுகிறதாம். இதைவைத்து பார்க்கும் போது சம்பள விஷயத்திலும் இந்த பிக்பாஸ் அல்டிமேட் தான் என தெரிய வந்துள்ளது. இன்றும் முதல் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட்டில் முதல் ப்ரோமோ வெளியானது..அதில் சுவாரஸ்ய கேள்விகளுக்கு ஆம் என்றால் குடிக்க வேண்டும்.. இல்லை என்றால் கடிக்க வேண்டும் என கூறப்படுகிறது.. வழக்கம் போல இந்த டாஸ்க்கிலும் வனிதாவுக்கு முரண்பாடு ஏற்பட கடுப்பில் டாஸ்கை விட்டு விலகுவதாக கூறிவிட்டு செல்கிறார் வனிதா..

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!
கதறி அழும் விசாலாட்சி; ஆறுதல் சொல்லும் மருமகள்; குணசேகரின் கேம் இஸ் ஓவர் என்று பேசும் ஜனனி: எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்!