
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட படு சூடாக போய்க்கொண்டிருக்கும் வனிதா மூன்றாவது திருமண விவகாரம். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அதிகமாக வனிதாவை விமர்சிப்பதை விட, எந்த ஒரு சம்மந்தமும் இல்லாமல் சிலர் ஓவராக விமர்சிப்பது தான் வனிதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: இவ்வளவு பிரமாண்டமா? வியக்க வைக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் வீடு..! வாங்க பார்க்கலாம்..!
தன்னை பற்றி தேவை இல்லாமலும் அசிங்கமாக பேசி விமர்சிப்பதாக சூர்யா தேவி மற்றும் ரவீந்திரன் ஆகியோர் மீது வனிதா வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். குறிப்பாக சூர்யா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என்றும், அதற்க்கு ஆதாரமாக ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார் வனிதாவின் லாயர்.
இதை தொடர்ந்து, வனிதா தன் மீது அவதூறு பரப்பி வருவதாக, சூர்யா தேவியும் பதிலுக்கு வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதில் பொய்யான தகவல்களை வெளியிட்டு தனக்கு மன உளைச்சலை வனிதா ஏற்படுத்தியதாக புகார் அளித்தார்.
மேலும் செய்திகள்: விஷ்ணு விஷால் பிறந்தநாளுக்கு காதலி கொடுத்த சர்பிரைஸ்..! நடு இரவில் களைகட்டிய கொண்டாட்டம்..!
இதை தொடர்ந்து இன்று, வனிதா மற்றும் சூர்யா தேவியின் புகார்களை வடபழனி போலீசார் விசாரணை செய்ய உள்ளதாகவும் எனவே, வனிதா மற்றும் சூர்யா தேவி தரப்பில் இருந்து காவல் நிலையத்தில் ஆஜர் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரபரப்பு விசாரணைக்கு பின்பே, வனிதா வனிதா தரப்பில் இருந்து வெளியானது உண்மையான ஆடியோவா அல்லது, பொய் சொல்வது சூர்யா தேவையா என்பது தெரியவரும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.