
கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை கொச்சையாகவும், ஆபாசமாகவும் அவதூறு செய்த விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தையே கொந்தளிக்க வைத்துள்ளது. இந்துக்களை உணர்வை புண்படுத்தியதாக தமிழக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், இந்து அமைப்புகள் என கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: புதிய காதலருடன் அமலா பால் பகிர்ந்த படுக்கையறை போட்டோ... செம்ம கிளாமரில் வேற லெவல் வைரல்...!
இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலைச் சேர்ந்த செந்திவாசனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து புதுச்சேரி அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலைச் சேர்ந்த சுரேந்திரன் சரணடைந்தார். தற்போது கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை தடை செய்ய வேண்டுமென கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இந்நிலையில் நடிகர், நடன இயக்குநர் என பன்முக திறமை கொண்ட ராகவா லாரன்ஸ் கந்த சஷ்டி கவசம் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான அக்கா மகளா?.... முன்னணி நடிகைகளையே அசர வைக்கும் அழகு...!
தனது முகநூல் பக்கத்தில், முருக பக்தர்களுக்கும் ஹாய். நான் உங்களிடம் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் கந்த சஷ்டி கவசம் கேட்டு வளர்ந்தவன். என் அம்மா தினமும் காலை கந்த சஷ்டி கவசத்தை எனக்கு படித்துக் காட்டுவார். அதன் சக்தி எனக்கு தெரியும். கந்த சஷ்டி கவசம் என்னை பாதுகாப்பதாக நம்புகிறேன்.
இதையும் படிங்க: மீண்டும் திரையில் ஜோடி சேரப் போகும் சூர்யா - ஜோதிகா... சூப்பர் கதையை தயார் செய்து வைத்திருக்கும் இயக்குநர்!!
நான் தினமும் வீட்டில் முருகக் கடவுளை வழிபடுகிறேன். அதை நான் இன்று சொல்ல ஒரு காரணம் இருக்கிறது. உங்களுக்கே அது தெரிந்திருக்கும். நாம் யாரையப் பற்றியும் பேசி அவர்களை பெரிய ஆளாக்க வேண்டாம். இந்த புகைப்படத்தில் முருகனின் அழகு, அன்பு மற்றும் சக்தியை பாருங்கள். காலம் அனைத்திற்கும் பதில் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.