பரதம் ஆடும்போது கீழே விழுந்த லட்சுமி மேனன்... படபடத்து போன ரசிகர்கள்..! வீடியோ

Published : Jul 16, 2020, 08:22 PM IST
பரதம் ஆடும்போது கீழே விழுந்த லட்சுமி மேனன்... படபடத்து போன ரசிகர்கள்..! வீடியோ

சுருக்கம்

சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரளத்து பைங்கிளியான நடிகை லட்சுமி மேனன்... நடனமாடும் போது கால் தவறி கீழே விழுந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரளத்து பைங்கிளியான நடிகை லட்சுமி மேனன்... நடனமாடும் போது கால் தவறி கீழே விழுந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய இந்த படத்தில், சசி குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் லட்சுமி மேனன்.  முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. பாவாடை தாவணியில் தோன்றி, தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார் லட்சுமி மேனன். மேலும் இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும் இவருக்கு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான ’கும்கி’,  ’பாண்டியநாடு’,  ’ஜிகர்தண்டா’,  ’மஞ்சப்பை’ போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால், வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார்.

ஏற்றம் கண்டு வந்து, லட்சுமி மேனனுக்கு புதுமுக நடிகைகளின் வரவால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. குறிப்பாக 'வேதாளம்' படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தபின், தொடர்ந்து அதே போன்ற பட வாய்ப்புகள் வந்ததால், படிப்பை காரணம் காட்டி தமிழ் திரையுலகை விட்டு விலகினார். இவர் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் ரத்தின சிவா இயக்கிய, ’ரெக்க’ படம் வெளியானது. இந்த படத்தில், விஜய்சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை அடுத்து இவர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த ’ஜில் ஜங் ஜக்’ திரைப்படம் ஒரு சில காரணத்தால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. 

இதைத்தொடர்ந்து,  கிட்டத்தட்ட 4 வருடத்திற்கு பின் மீண்டும் பிரபல இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில், நடிகர் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க தயாரானார் லட்சுமி மேனன்.

ஏற்கனவே கௌதம் கார்த்திக் கடந்த ஆண்டு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ’தேவராட்டம்’ படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து, இரண்டாவது முறையாக, இருவரும் கைகோர்க்க உள்ளனர். இந்த படத்தில் தான் லட்சுமி மேனன் நடிக்க உள்ளார். நடிகை லட்சுமிமேனன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஏற்கனவே குட்டிப்புலி, கொம்பன், ஆகிய படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் டபுள் ஹீரோயின் கான்செப்ட் படத்திலும் லட்சுமி மேனன் நடிக்கிறார். இந்த படங்கள், தற்போது கொரோனா பிரச்சனை முடிவடைந்த பின்னர் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரீ-என்ட்ரிக்காக வெறித்தனமாக தயாராகி வரும் லட்சுமி மேனன், வீட்டில் இருக்கும் நேரங்களில் நடன பயிற்சி எடுப்பதையும் மறந்ததில்லை.

அந்த வகையில் மிகவும் கஷ்டமான ஸ்டேப் ஒன்றை வீட்டில் அவர் பயிற்சி செய்த போது, கால் இடறி கீழே விழுந்துள்ளார். மேலும் இது மிகவும் கடினமான ஸ்டேப் என்றும் யாரும் வீட்டில் பழக வேண்டாம் என்பதையும், அந்த வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். லட்சுமி மேனன் தரையில் விழுந்ததில் கொஞ்சம் பதறி தான் போய் விட்டனர் இவரது ரசிகர்கள்.

அந்த வீடியோ இதோ...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!