ஆபாச உடையில் ராமர் பெயருடன் வலம் வந்த நடிகை...காய்ச்சித் தள்ளிய நெட்டிசன்கள்...

By Muthurama LingamFirst Published Nov 16, 2019, 12:08 PM IST
Highlights

‘சுத் தேசி ரொமான்ஸ்’இந்திப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வாணி கபூர். அடுத்து ‘பந்த் பாஜா பார்த்’இந்திப்படத்தின் ரீமேக்கான ‘ஆஹா கல்யாணம்’என்கிற ரீமேக்கில் நடித்தார். வருடத்துக்கு ஒரு படம் இரண்டு படம் என்று மிக குறைவான படங்களில் மட்டுமே நடித்தாலும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் படு சூடான படங்களை வெளியிடுவதால் வாணி கபூர் மிக பிரபலமான நடிகைகளுல் ஒருவராகவே வலம் வருகிறார்.

தனது கவர்ச்சியான போஸ்களால் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் ரசிகர்களைக் கிறங்கடித்துவரும் நடிகை வாணி கபூர் சமீபத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஒன்றில் மாட்டிக்கொண்டுள்ளார். இந்து மத ஆதரவாளர்கள் அவரைத் தொடர்ந்து ஆபாச வசவுகளால் மிரட்டி வருகின்றனர்.

‘சுத் தேசி ரொமான்ஸ்’இந்திப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வாணி கபூர். அடுத்து ‘பந்த் பாஜா பார்த்’இந்திப்படத்தின் ரீமேக்கான ‘ஆஹா கல்யாணம்’என்கிற ரீமேக்கில் நடித்தார். வருடத்துக்கு ஒரு படம் இரண்டு படம் என்று மிக குறைவான படங்களில் மட்டுமே நடித்தாலும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் படு சூடான படங்களை வெளியிடுவதால் வாணி கபூர் மிக பிரபலமான நடிகைகளுல் ஒருவராகவே வலம் வருகிறார்.

Wearing Lord Sri Raam's name on the uncultured dresscode doesn't give value to the actress Vani Kapoor . This is hurting the sentiments of devotees of Lord Sri Raam. We uarge to removed such images from the site and value the devotees sentiments. https://t.co/v0jRJntB5w

— Pratibha Nayak (@prati_nayak)

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்த ஒரு கவர்ச்சியான படத்தில் அவர் அணிந்திருந்த மேலாடையில் ‘ராம் ராம் ராம்’என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதைக் கண்டு கொதித்த இந்து மத ஆதரவாள்ர்கள் கடுமையான எச்சரிக்கைகளுடன் அப்படங்களை உடனே நீக்கும்படி கட்டளை இட்டனர். அவர்களின் கோபத்தை உணர்ந்துகொண்ட வாணி கபூர், இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்த அப்படத்தை டெலிட் செய்துவிட்டு, முகநூலில் இருந்த படத்தை மட்டும் இன்னும் அப்படியே விட்டு வைத்திருக்கிறார். அதற்கும் எதிர்வினையாற்றத் துவங்கியுள்ள ரசிகர்கள் ‘அப்படத்தையும் உடனே நீக்காவிட்டால் நடக்குறதே வேற’என்று எச்சரித்து வருகின்றனர்.

click me!