அஜீத்தின் தயாரிப்பாளரை அமெரிக்காவில் சந்தித்த நயன்தாரா...’வலிமை’க்கு எத்தனை கோடி சம்பளம் கேக்குறார்னு பாருங்க...

By Muthurama LingamFirst Published Nov 16, 2019, 11:14 AM IST
Highlights

இந்நிலையில் தனது 35 வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக அமெரிக்கா சென்றுள்ள அவர் அஜீத் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரை விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நியூயார்க்கில் சந்தித்துள்ள படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வெறுமனே ‘நியூயார்க்’என்று மட்டுமே கமெண்ட் போட்டுள்ளார்.

நாளை மறுநாள் நவம்பர் 18ம் தேதி அன்று தனது 35 வது பிறந்தநாளில் காலடி எடுத்து வைக்கவுள்ள நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அங்கு அஜீத் படத் தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்த படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரஜினியின் தர்பார் படத்தை முடித்து விட்டு தனது காதலர் விக்னேஷ் சிவனின் ‘நெற்றிக்கண்’படத்தில் நடித்து வந்த நயன்தாரா, அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தனது 35 வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக அமெரிக்கா சென்றுள்ள அவர் அஜீத் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரை விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நியூயார்க்கில் சந்தித்துள்ள படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வெறுமனே ‘நியூயார்க்’என்று மட்டுமே கமெண்ட் போட்டுள்ளார்.

🇺🇸 pic.twitter.com/w1qw59jIhE

— Nayanthara✨ (@NayantharaU)

இந்த சந்திப்பு சும்மா நடந்திருக்க வாய்ப்பில்லை. போனிகபூர் அடுத்து தயாரிக்கும் ‘வலிமை’படத்தின் ஹீரோயின் இன்னும் முடிவாகாத நிலையில் அப்படம் தொடர்பான சந்திப்பாகத்தான் இருக்கும். வழக்கத்தை விட நயன் தாரா அதிக சம்பளம் கேட்டதால் அவரிடம் மேனேஜர்கள் பேசுவதைத் தவிர்த்து தானே பேசுவதாக போனி கபூர் கூறியிருக்கக்கூடும். அதை ஒட்டி நடந்த சந்திப்பாகத்தான் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அஜீத்தின் விஸ்வாசம் படத்துக்கு 3 கோடி சம்பளம் வாங்கிய நயன், ஆர்.ஜே.பாலாஜியின் படத்துக்கு எட்டு கோடி வாங்கியிருப்பதால் ‘வலிமை’படத்துக்கு ஆறு கோடி கேட்டு அடம் பிடிப்பதாகத் தகவல்.

click me!