’பப்புல டான்ஸ் ஆடுற பொண்ணுக்கு மப்பு ஏறிப்போச்சு...’ உதார் விட்டு ஊரை ஏமாற்றும் மீரா மிதுன்..!

Published : Nov 16, 2019, 11:11 AM IST
’பப்புல டான்ஸ் ஆடுற பொண்ணுக்கு மப்பு ஏறிப்போச்சு...’ உதார் விட்டு ஊரை ஏமாற்றும் மீரா மிதுன்..!

சுருக்கம்

இனி யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என உதார் விட்டு அலைகிறார் நம்ம மோசடி நாயகி மீரா மிதுன். 

மீரா மிதுணுக்கு தமிழ்நாட்டிற்கான மாநில இயக்குனர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான அறிக்கை மற்றும் அடையாள அட்டையையும் சமூக வலைதள பக்கத்தில் வெளிட்டுள்ளார்.

 

அதில், "பெரும்பாலான பேரரசுகள் மற்றும் நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணம் ஊழல். ஒரு காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த தலைவர்கள் தங்கள் சொந்த இனத்தை வென்றெடுக்கும் வரை அவர்களுக்கு விருப்பமான ஒரு தலைவருக்கு வாக்களிப்பதில் அரசாங்கத்திற்கு எதிராக ஊழல் எதிர்ப்பு முழக்கத்தை முழக்கமிட்டு நான் நீண்ட காலமாக முன்னெடுத்து வந்தேன். ஆனால் இங்கே அனைவரையும் திருத்திக் கொண்டு வருகிறேன், இப்போது ஊழல் தடுப்பு ஆணையத்தில் (ஏ.சி.சி) சென்னை தமிழ்நாடு மாநில இயக்குநராக உள்ளேன். இனிமேல் யாரும் மறைக்க முடியாது, நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது. ஊழல் இல்லாத அரசுக்கு என்னுடன் கைகோருங்கள்’’என்று கூறியுள்ளார்.  

 ஆனால் இது முழுக்க முழுக்க பொய் தகவல். லஞ்ச ஒழிப்பு மற்றும் குற்றத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான  http://anticorruptionandcrimecontrolcommittee.org/Registration-Form.aspx என்ற பக்கத்தில் நமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படத்தை கொடுத்து பணம் செலுத்தினால் யார் வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கான அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இதற்காக குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும். மாவட்ட வாரியான அடையாள அட்டைக்கு ரூ. 10000, மாநில வாரியான அடையாள அட்டைக்கு ரூ.15000, தேசிய அளவிலான அடையாள அட்டைக்கு ரூ.20000 கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது விதி.

 

ரூ.15000 செலுத்தி தனது நிஜ பெயரான தமிழ் செல்வி என்ற பெயரில் ஓர் அடையாள அட்டையை வாங்கி வைத்துக்கொண்டு, தனக்கு லஞ்ச ஒழிப்புத்துறையில் வேலை கிடைத்ததாகவும், இனி யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என உதார் விட்டு அலைகிறார் நம்ம மோசடி நாயகி மீரா மிதுன். இதுதெரியாத பல அப்பாவி மக்கள் மீராமிதுனுக்கு மத்திய அரசில் வேலை கிடைத்ததாக நம்பி ஏமாந்து கொண்டிருக்கின்றனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ராதாவாக மாறிய உதய சந்திரா - எப்படி, எதற்காக? யாருக்கும் தெரியாத உண்மை கதை இதோ!
‘கருப்பு’க்கு முன் மே மாதத்தில் ரிலீஸ் ஆன சூர்யா படங்களும்... அதன் ரிசல்டும் ஒரு பார்வை