
தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த, பாடகி வாணி ஜெயராம்... சங்கீத குடும்பத்தை சேர்ந்தவர். திருமணத்திற்கு பின்னர் பல பெண்கள் தங்களின் கனவுகளை தங்களுக்குளேயே புதைத்துக்கொள்ளும் நிலையில் , வாணி ஜெயராம் தன்னுடைய கணவரின் துணையோடு தன்னுடைய கனவுக்கு உயிர் கொடுத்து ஜொலிக்க செய்தவர். சிறந்த பின்னணி பாடகியாக உருவெடுத்த இவர், தமிழ் உள்ளிட்ட 19 மொழிகளில் சுமார் 10,000-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
வாணி ஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநில விருதுகளையும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான பத்ம விருது பட்டியலில் இவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது.
இந்நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் வசித்து வந்த இவர், தன்னுடைய வீட்டில் தலையில் அடிபட்டு மர்மனான முறையில் இறந்து கிடந்தார். வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் கொடுத்த தகவலின் படி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, போலீசார் இயற்க்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து, தற்போது வாணி ஜெயராமின் உடற்கூறாய்வு முடிந்து... இவரின் உடல் நுங்கம் பக்கத்தில் உள்ள அவரின் இல்லத்திற்கு வந்துள்ளது. மேலும் இந்த தகவல் தெரியவந்ததுமே, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர் வீட்டின் முன்பு அஞ்சலி செலுத்துவதற்காக குவிந்து விட்டனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.