
பின்னணி பாடகியான வாணி ஜெயராம் கணவர் இறப்பிற்கு பின்னர், நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தனியாக வசித்து வருகிறார். மேலும் இவருடைய வீட்டு வேலைக்காக மலர்கொடி என்பவர் பணிபுரிந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வீட்டு வேலை செய்வதற்காக வந்த மலர்கொடி வீட்டின் கதவை பலமுறை தட்டிப் பார்த்தும் திறக்காததால், போன் செய்து பார்த்துள்ளார்.
வாணி ஜெயராம் போனையும் எடுக்காததால், இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் போன் செய்து பார்த்தும் வாணி ஜெயராம் எடுக்கவில்லை. இதை அடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராமின் சகோதரருக்கு போன் மூலம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வாணி ஜெயராம் வீட்டிற்கு வந்த அவருடைய சகோதரர், அவரிடம் இருந்த மற்றொரு சாவியின் மூலம் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது... வாணி ஜெயராம் தன்னுடைய அறையில் தலையில் அடிபட்டு ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
பின்னர் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து ஆயிரம் விளக்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றியதோடு மட்டும் மின்றி, இந்திய தண்டனை சட்டம் 174 இன் படி இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
BREAKING: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானர்; மறைந்தது கானக் குயில்!!
வாணி ஜெயராமின் உடலை தற்போது பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பியுள்ள நிலையில்... உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பிறகே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.