ரஷ்யா செல்லும் 'வலிமை' படக்குழு! எப்போது..? வெளியான சூப்பர் அப்டேட்..!

By manimegalai aFirst Published Aug 14, 2021, 5:20 PM IST
Highlights

'வலிமை' படத்தின் இறுதியாக எடுக்கப்பட உள்ள சண்டை காட்சிக்காக, 'வலிமை' படக்குழு, 'ரஷ்யா' செல்ல உள்ளது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

'வலிமை' படத்தின் இறுதியாக எடுக்கப்பட உள்ள சண்டை காட்சிக்காக, 'வலிமை' படக்குழு, 'ரஷ்யா' செல்ல உள்ளது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த, 'நேர்கொண்ட பார்வை' படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், இந்த படத்தை தொடர்ந்து இவர் அஜித்துடன் இணைந்துள்ள இரண்டாவது படமான 'வலிமை' குறித்து, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. 'நேர்கொண்ட பார்வை' படத்தை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறார். 

இந்த படத்தின் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில், ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக நடித்தவர். இந்த படம் இவருக்கு சிறந்த அறிமுகப்படமாக அமைந்தாலும், தமிழ் மற்றும் ஹிந்தியில் தொடர்ந்து தரமான கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.  மேலும் இந்த படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'வலிமை' படத்தின் இறுதிக்கட்ட பட்டப்படிப்பு... அதாவது கடைசியாக எடுக்க உள்ள சண்டை காட்சி ஒன்றை மட்டும் படக்குழு, வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக, தற்போது வரை வெளிநாடு செல்லமுடியவில்லை. மேலும் வெளிநாடுகள் செல்ல மெல்ல மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புகளுக்கான பணியில் 'வலிமை' படக்குழுவினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இன்னும் ஒரு சில நாட்களில் 'வலிமை' படக்குழு ரஷ்யா செல்ல உள்ளதாகவும், அங்கு 20 ஆம் தேதி படப்பிடிப்பை துவங்கி 5 நாட்களில் படப்பிடிப்பை முடித்து கொண்டு மீண்டும் சென்னை வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் கூடிய விரைவிலேயே ரசிகர்கள் எதிர்பார்க்கும், ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த தகவல் தல ரசிகர்களை செம்ம குஷியாகியுள்ளது.

click me!