என்னை டார்ச்சர் பண்றாங்க... கைது செய்ய வந்த போலீசாரை தரக்குறைவாக பேசிய மீரா மிதுன்.. வைரல் வீடியோ!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 14, 2021, 03:37 PM IST
என்னை டார்ச்சர் பண்றாங்க... கைது செய்ய வந்த போலீசாரை தரக்குறைவாக பேசிய மீரா மிதுன்.. வைரல் வீடியோ!

சுருக்கம்

அப்போது கூட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மீரா மிதுன், இவனுங்க எல்லாரும் என்னை டார்ச்சர் பண்றாங்க. முதலமைச்சரே ஒரு தமிழ் பொண்ணுக்கு இப்படித்தான் நடக்கணுமா? என கதறி அழுவது போல் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

சர்ச்சையின் பிறப்பிடமாக வலம் வருபவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நோக்கத்தோடு சகட்டு மேனிக்கு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மீராமிதுன் பட்டியலின சமூகத்தினரையும் மற்றும் அச்சமூகத்தை சார்ந்த திரைப்பட இயக்குனர்களையும் மிகவும் இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசிய சமூகவலைதளத்தில் பதிவிட்டது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னி அரசு உள்ளிட்டோர் கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மீரா மிதுனை நிச்சயம் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது வரும் நிலையில், தாராளமாக என்னை கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா..? ஆனால், என்னை கைது செய்வது என்பது நடக்காது ; அப்படி நடந்தால் அது உங்கள் கனவில் தான் நடக்கும்..! என தெரிவித்துள்ளது சர்ச்சையை பெரிதாக்கியது. 

மீரா மிதுனின் இந்த பேச்சு மீண்டும் தமிழக மக்களை கோபத்தில் ஆழ்த்தியது இவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என காவல்துறை மற்றும் தமிழக அரசை நோக்கி கேள்விகள் எழுந்தது. இந்நிலையில், மீரா மிதுன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.  கேரளாவில் பதுங்கி இருந்த அவரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார், சென்னை அழைத்து வருகின்றனர். இந்நிலையில் மீரா மிதுன் பதுங்கியிருந்த இடத்திற்கு சென்று போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அப்போது கூட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மீரா மிதுன், இவனுங்க எல்லாரும் என்னை டார்ச்சர் பண்றாங்க. முதலமைச்சரே ஒரு தமிழ் பொண்ணுக்கு இப்படித்தான் நடக்கணுமா? என கதறி அழுவது போல் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்
நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு