
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் அஸ்வின். மாடல், சீரியல் நடிகர் என பலமுறை திரையில் தோன்றியிருந்தாலும் அஸ்வினுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பெண் ரசிகைகள் அதிகரித்தனர். சமீபத்தில் அஸ்வின் நடத்தில் வெளியான ‘முனுமுனுக்குர முத்தம்மா’ பாடல் யூ-டியூப்பில் வேற லெவலுக்கு வைரலானது.
இதையடுத்து தமிழில் சில படங்களில் அஸ்வின் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழை அடுத்து தெலுங்கிலும் அஸ்வின் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்துள்ளார். 'மீட் க்யூட்' என்ற தெலுங்கு ஆந்தாலஜி வெப் தொடரில் அஸ்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தெலுங்கின் முன்னணி ஹீரோவான நானி தயாரித்து வரும் இந்த வெப் சீரிஸில் இதில் சுனைனா, அதா சர்மா, அகன்ஷா சிங், ருஹானி சர்மா, சஞ்சிதா பூனாச்சா மற்றும் வர்ஷா பொல்லம்மா என ஆறு ஹீரோயின்கள் நடித்துள்ளார்களாம்.
சத்யராஜ், ரேவதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்களாம். தெலுங்கில் அஸ்வின் நடிக்கும் முதல் வெப் தொடரிலேயே 6 முன்னணி ஹீரோயின்களா, போறப்போக்கைப் பார்த்தால் டாப் ஹீரோக்களுக்கே டப் கொடுப்பார் போலயே என ரசிகர்கள் பட்டாளம் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.