மீரா மிதுன் வாய் கொழுப்பால் வந்த வினை... சவடாலுக்கு சரியான பதிலடி கொடுத்த காவல்துறை...!

By manimegalai aFirst Published Aug 14, 2021, 4:03 PM IST
Highlights

தன்னுடைய வாய் கொழுப்பால் இன்று கேரளாவில் வைத்து நடிகை மீரா மிதுனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம், இவருடைய சவடாலுக்கு போலீசார் சரியான பதிலடி கொடுத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
 

தன்னுடைய வாய் கொழுப்பால் இன்று கேரளாவில் வைத்து நடிகை மீரா மிதுனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம், இவருடைய சவடாலுக்கு போலீசார் சரியான பதிலடி கொடுத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தன்னுடைய வாயை விட்டு பல பிரச்சனைகளையும், ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ள மீரா மிதுன், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யாவைப் பற்றியும், அவர்களது மனைவியான சங்கீதா, ஜோதிகா பற்றியும் மிகவும் தரக்குறைவாக பேசியதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. அதே போல் முன்னணி நடிகையான, த்ரிஷா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், போன்ற பிரபலங்கள் தன்னுடைய முகத்தை காப்பி அடித்து பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் தன்னுடைய உடை வடிவமைப்பை காப்பி செய்வதாக கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரம் இல்லாமல் பொய்களை வாரி இறைத்தார்.

அதே போல், பல சமயங்களில் அரசியல் காட்சிகள் குறித்து... தமிழகத்தில், ஆச்சு சரி இல்லை இல்லை என்று... கடந்த ஆச்சியின் போது பிரதமர் மோடிக்கு கூட பல கோரிக்கைகளை வைத்தார். தன்னிடம் ஆட்சியை கொடுக்கும் படி இவர் கேட்டு போட்ட ட்விட்டுகள் எல்லாம் காமெடியில் உச்ச பட்சம். 

அதே போல் தன்னை பற்றி அனைவரும் எப்போது பரபரப்பாக பேச வேண்டும் என்கிற என்னத்தில் வாயிக்கு வந்ததையெல்லாம் சற்றும் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். டந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில்  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை மிகவும் அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் மீரா மிதுனை வன்மையாக கண்டித்து பதிவு போட்டது மட்டும் இன்றி, அவரை கைது செய்யவேண்டும் என கூறி வந்தனர்.

எனவே மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டுமென புரட்சி பாரதம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு உள்ளிட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 32/2021 U/s 153,153A(1) (a),505 (1) (b),505 (2) IPC and section 3(1) (r),3(1)(s), (3)(1) (u) of sc &ST Prevention Act 1989-ன் ஆகிய 7 பிரிவுகளின் கீழ் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராகும் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பிய நிலையில் , இவர் ஆஜர் ஆகாத நிலையில், இது தொடர்பாக மீரா மிதுன் விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் மீரா மிதுன் தன்னை 'தாராளமாக என்னை கைது செய்யுங்கள்' என்றும்,  ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா..?. ஆனால், என்னை கைது செய்வது என்பது நடக்காது  என்றும் போலீசாருக்கு சவால் விடும் விதமாக கூறியிருந்தார். அதே நேரத்தில் இவரது வாய் கொழுப்புக்கு போலீசார் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் கூறி வந்த நிலையில், சற்று முன்னர் கேரள மாநிலம் திருவனந்த புறத்தில் தலைமறைவாக இருந்த, நடிகை மீரா மிதுனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 
 

click me!