
நாளைய தினம் 'வலிமை' படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில், இவரது பிறந்தநாளை முன்னிட்டு 'வலிமை' செகண்ட் சிங்கிள்' பாடல் வெளியாகுமா? என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர் அஜித்தின் ரசிகர்கள்.
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின், நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் காம்பினேஷனில் உருவாகி வருகிறது ‘வலிமை’ திரைப்படம். இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். வலிமை திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ரசிகர்களின் ஒன்றரை வருட தொடர் வேண்டுகோளுக்குப் பிறகு கடந்த மாதம் தான் இந்த பதின் மோஷன் போஸ்டர் மற்றும் சில ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டனர். இந்நிலையில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலை வெளியிட வேண்டும் என, ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், ஆகஸ்ட் 2 ஆம் தேதி இரவு 10 :45 மணிக்கு 'வேற மாறி' என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட்டனர்.
வலிமை படத்தின் ஓப்பனிங் பாடலான, 'வேற மாறி' பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருந்தார். இந்நிலையில் நாளைய தினம் 'வலிமை' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின், பிறந்தநாள் என்பதால் இந்த கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள். ஆனால் தற்போது வரை செகண்ட் சிங்கிள் பாடல் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், நாளை திடீர் என ஏதாவது அறிவிப்பு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.