அச்சு அசல் ஜெயலலிதா - எம்.ஜி.ஆர் போலவே மாறிய கங்கனா, அரவிந்த் சாமி! வெளியானது உந்தன் கண்களில் என்னடியோ பாடல்!

By manimegalai aFirst Published Aug 30, 2021, 5:17 PM IST
Highlights

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, 'தலைவி' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி வெளியாக வேண்டிய நிலையில், கொரோனா இரண்டாவது அலை தலைதூக்கியதால் படக்குழு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாகவும், தற்போது செப்டம்பர் 10 ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, 'தலைவி' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி வெளியாக வேண்டிய நிலையில், கொரோனா இரண்டாவது அலை தலைதூக்கியதால் படக்குழு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாகவும், தற்போது செப்டம்பர் 10 ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'தலைவி'. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை பல இயக்குனர்கள் படமாக்க போட்டி போட்ட நிலையில், முதலில் படத்தை இயக்கி ரிலீஸ் செய்யவுள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய். ஏற்கனவே... 'குயின்' என்ற பேரில் ஜெயலலிதாவின், வாழ்க்கை வெப் சீரிஸாக எடுக்கப்பட்டதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த படத்தில், ஜெயலலிதாவின் குழந்தை பருவம், இளமை காலம், மற்றும் முதலமைச்சராக வந்தது என, அவரை பற்றி பலரும் அறிந்திடாத சில அறிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளதால் இப்படத்தை, திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என படக்குழுவினர் உறுதியாக இருந்தனர். திரையரங்கில் வெளியான பின்னர் ஓடிடியில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

ஏப்ரல் மாதமே வெளியாகவேண்டிய இப்படத்தை, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அப்போது அனுமதி கொடுக்கப்பட்டதாலும், கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வந்தததால், திரையரங்குகள் மூடும் சூழ்நிலை நிலவி வந்ததாலும் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது. சுமார் நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளதை தொடர்ந்து, செப்டம்பர் 10 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்த துவங்கியுள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது உந்தன் கண்களில் என்னடியோ... என துவங்கும் பாடலை வெளியிட்டுள்ளனர். அதில் அச்சு அசல் ஜெயலலிதா போலவே, கங்கானாவும் - எம் .ஜி.ஆர் போல அரவிந்த் சாமியும் தோன்றியுள்ளனர். பார்க்கவே பிரமிப்பூட்டும் விதமாக வெளியாகியுள்ள இந்த பாடலின், வீடியோ இதோ...

 

click me!