
வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக, பிரபல கன்னட நடிகை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: கொழுந்து விட்டு எரியும் பிரச்சனை... தனியாக வசிக்கும் சமந்தா... காதல் கணவரை விவாகரத்து செய்கிறாரா?
போதை பொருள் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்து பல பிரபலங்கள் போதை பொருள் வைத்திருப்பதற்காக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சனிக்கிழமை அன்று, தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கோகென் வைத்திருந்த குற்றத்திற்காக பாலிவுட் நடிகர், அர்மான் கோலி என்சிபி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்தது வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் என்பதால் இது எப்படி அவருக்கு கிடைத்தது? வெளிநாட்டில் இருந்து கடத்திவரும் கும்பல் பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டது.
மேலும் ஏற்கனவே போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகைகளான சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திரிவேதி ஆகியோரின் முடியை வைத்து, போதை பொருள் பயன்படுத்தினார்களா? என சோதனை செய்த போது, அவர்கள் போதை பொருள் பயன்படுத்தியது ஊர்ஜிதமானது. எனவே ஜாமீனில் வெளிவந்த அவர்கள் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது.
மேலும் செய்திகள்: நான் ரொம்ப பிசி... அப்பா வயது நடிகர் படத்தில் இருந்து கழண்டு கொண்ட ஸ்ருதிஹாசன்! ஜோடியாவது யார் தெரியுமா?
இவர்களை தொடர்ந்து மற்றொரு கன்னட நடிகையான, சோனியா அகர்வால் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த போதை மருந்து விற்பனையாளர் தாமஸ் காலுவை கோவிந்த்புரா என்பவரை போலீசார் பொறி வைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து சுமார் 1.50 லட்சம் மதிப்புள்ள 403 எக்ஸ் டெக் மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதனை அவர் யார் யாருக்கெல்லாம் வழங்கி வந்தார் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் செய்திகள்: அஞ்சலி பாப்பா போன்ற குட்டை உடை... அசப்பில் நயன்தாரா போல் இருக்கும் அதுல்யாவின் அட்ராசிட்டி போட்டோஸ்!!
அப்போது, கல்லூரி மாணவர்கள் மற்றும் சில பிரபலங்களுக்கும் சப்பிளே செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில் போதை மருந்து விற்பனையாளர் தாமஸ் காலுவிடம் தொடர்பு வைத்திருந்த பிரபல கன்னட நடிகை சோனியா அகர்வால் வீட்டில், திடீர் என போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த நிலையில், அவர் வீட்டில் சுமார் 40 கிராம் அளவிற்கு கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.