13 மில்லியன் ஃபாலோவர்ஸை கொண்ட முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பெற்ற அல்லு அர்ஜுன்!

Published : Aug 30, 2021, 06:20 PM IST
13 மில்லியன் ஃபாலோவர்ஸை கொண்ட முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பெற்ற அல்லு அர்ஜுன்!

சுருக்கம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகம் ஃபாலோவர்ஸ் பின் தொடரும் நடிகர் என்கிற பெருமை, நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்துள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.  

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகம் ஃபாலோவர்ஸ் பின் தொடரும் நடிகர் என்கிற பெருமை, நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்துள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

சமீபத்தில் பிரபல இளம் நடிகை ராஷ்மிக்கா மந்தனா சமூக வலைத்தளத்தில் அதிகம் ஃபாலோவர்ஸ்சை கொண்ட தென்னிந்திய நடிகை என அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னணி நடிகைகளாக இருக்கும் சமந்தா, காஜல் அகர்வால் போன்ற பிரபலங்களை இந்த சாதனை மூலம் பின்னுக்கு தள்ளினார் ராஷ்மிகா. இதற்காக அனைத்து ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இவரை தொடர்ந்து தென்னிந்திய நடிகர்களில், நடிகர் விஜய் தேவாரகொண்டாதான் அதிக ரசிகர்கள் ஃபாலோ பண்ணும் பிரபலமாக இருந்த நிலையில், அவரது சாதனையை 13 மில்லியன் ஃபாலோவர்ஸை பெற்றதன் மூலம் அல்லு அர்ஜுன் முறியடித்துள்ளார். விஜய் தேவாரகொண்டாவை தற்போது 12 .9 மில்லியன் ஃபாலாவேர்ஸ் பின்தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அல்லு அர்ஜுனை எட்டி பிடிக்கவும் வெகு தூரம் இல்லை என ஒரு தரப்பினர் தெரிவித்து வருகிறார்கள்.

இதை தொடர்ந்து, அல்லு அர்ஜுனின் இந்த சாதனைக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அல்லு அர்ஜுன் தற்போது நடித்து முடித்துள்ள, 'புஷ்பா' திரைப்படத்தின் முதல் பாகம், வரும் கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் சமீபத்தில் வெளியான ஓடு ஓடு ஆடு பாடல் வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

காட்டுத்தீ போல் பரவும் வில்லங்கமான வீடியோ... பாரு - கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா?
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் ஹீரோவாக அறிமுகமாகும் ‘வித் லவ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு