வைரமுத்து பாலியல் சர்ச்சை குறித்து முதல் முறையாக வாய் திறந்த மனைவி! உண்மையா?

Published : Oct 16, 2018, 03:15 PM IST
வைரமுத்து பாலியல் சர்ச்சை குறித்து முதல் முறையாக வாய் திறந்த மனைவி! உண்மையா?

சுருக்கம்

ஆண்டாளை விமர்சித்ததால் சர்ச்சையில் சிக்கி படாத பாடு பட்ட வைரமுத்து ,இப்போது தான் கொஞ்சம் சமாதானமாக இருந்துவந்தார். அதற்குள் ME TOO  ஹேஷ் டேக் இயக்கத்தால், இப்போது இன்னொரு சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார்.

ஆண்டாளை விமர்சித்ததால் சர்ச்சையில் சிக்கி படாத பாடு பட்ட வைரமுத்து ,இப்போது தான் கொஞ்சம் சமாதானமாக இருந்துவந்தார். அதற்குள் ME TOO  ஹேஷ் டேக் இயக்கத்தால், இப்போது இன்னொரு சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார். சுவிச்சர்லாந்துக்கு இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த போது வைரமுத்து தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக சின்மயி ஆரம்பித்திருக்கும் இந்த விவகாரம் தான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்.

டிவிட்டரில் சின்மயி ஒரு பக்கம் குற்றம் சாட்டை, அதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் , நான் என் மீது குற்றமில்லை என நிரூபிக்க ஆதாரம் திரட்டி இருக்கிறேன் என வைரமுத்து ஒரு வீடியோவே வெளியிட்டார். அதற்கு பதில் அளித்த சின்மயி வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை தான் செய்ய வேண்டும் என்று காட்டமாக பதிலளித்திருந்தார்.

தொடர்ந்து வைரமுத்து மீது  தற்போது மேலும் சில பெண்கள் இதே மாதிரியான குற்றச்சாட்டி அடுக்கி இருப்பதால் இந்த பிரச்சனை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. இது ஒரு பக்கமிருக்க வைரமுத்துவுக்கு ஆதரவாக சிலரும், அவருக்கு எதிராக சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எந்த பக்கம் செல்ல என தெரியாமல் சிலரும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வைரமுத்துவின் மனைவி சமீபத்தில் இந்த சம்பவம் குறித்து மனம் திறந்திருக்கிறார். அதில் என் கணவர் எந்த தவறும் செய்திருக்க மாட்டார். எந்த விஷயத்தையும் என்னிடம் இருந்து மறைக்க மாட்டார். அவர் மீது வீணாக பழி சுமத்தி இருக்கின்றனர் என தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே ஆதாரமில்லாமல் சின்மயி புகார் தெரிவித்திருக்கிறார் என பலர் கூறி வரும் நிலையில், வைரமுத்துவின் மனைவி இப்படி தெரிவித்திருப்பது வைரமுத்துவிற்கு மேலும் சாதகமாகி இருக்கிறது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!