ஆடிசனுக்கு வந்த நடிகையின் மேலாடையை அவிழ்த்த இயக்குநர்!!!

By vinoth kumarFirst Published Oct 16, 2018, 1:39 PM IST
Highlights

'MeToo' வில் அசிக்கப்பட்டாண்டா ஆட்டோக்காரன் ரேஞ்சில் நாளுக்கு நாள் அதிக நடிகளால் அசிங்கப்பட்டிருப்பது இயக்குநர் ஷைஜித் கான்தான். ஏற்கனவே மூன்று நடிகைகளை இவர் துகிலுரிந்த கதை வெளியான நிலையில் தற்போது  நடிகை சிம்ரன் சுரி சஜித் கான் மீது புகார் தெரிவித்துள்ளார். 

'MeToo' வில் அசிக்கப்பட்டாண்டா ஆட்டோக்காரன் ரேஞ்சில் நாளுக்கு நாள் அதிக நடிகளால் அசிங்கப்பட்டிருப்பது இயக்குநர் ஷைஜித் கான்தான். 
ஏற்கனவே மூன்று நடிகைகளை இவர் துகிலுரிந்த கதை வெளியான நிலையில் தற்போது  நடிகை சிம்ரன் சுரி சஜித் கான் மீது புகார் தெரிவித்துள்ளார்.

  

அவர் சஜித் கான் பற்றி கூறியிருப்பதாவது, 2012ம் ஆண்டு அந்த சம்பவம் நடந்தது. ஹிம்மத்வாலா படத்திற்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்து கொண்டிருந்தார். ஆடிஷனுக்காக தனது வீட்டிற்கு வருமாறு சஜித் கான் எனக்கு போன் செய்தார். நானும் அவர் வீட்டிற்கு சென்றேன். அவர் டிரெட்மில்லில் இருந்தார். என் உடம்பை பார், எவ்வளவு நன்றாக உள்ளது என்றார்.

ஆடிஷனுக்கு வரச் சொல்லிவிட்டு இந்த சஜித் கான் ஏன் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். சிறிது நேரத்தில் அவர் என்னை ஆடையை அவிழ்க்குமாறு கூறினார். நான் தான் இயக்குனர். உங்களின் உடம்பை பார்க்க வேண்டும் என்றார். நான் ஆடையை அவிழ்க்காமல் நின்று கொண்டிருந்தேன். 

சஜித் கான் என் மேலாடையை கீழே இழுத்து அவிழ்க்கப் பார்த்தார். உடம்பை காட்டு, இதில் என்ன இருக்கிறது என்றார். நான் அதிர்ச்சி அடைந்து அவரை திட்டத் துவங்கினேன். எனக்கு அழுகை வந்துவிட்டது. உடனே அவர் கத்தாதே, பக்கத்து அறையில் என் அம்மா இருக்கிறார். அவர் காதில் விழுந்துவிடப் போகிறது என்றார்.

சஜித் வீட்டில் இருந்து வெளியே வந்த நான் என் செல்போனில் அவரின் எண்ணை நீக்கிவிட்டேன். ஆனால் அவர் ஒரு மணிநேரத்தில் எனக்கு மீண்டும் போன் செய்து, நாம் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்றால் ஒருவரையொருவர் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார். நான் அவரை திட்டிவிட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டேன். சஜித் பற்றி வெளியே சொல்ல வேண்டும் என்று 6 ஆண்டுகளாக நினைத்தேன். 

ஆனால் அவர் பெரிய ஆள். அவர் மீது நான் புகார் தெரிவித்தால் யாரும் கேட்க மாட்டார்கள். அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சஜித் பற்றி நடிகைகள் சலோனி சோப்ரா, ரேச்சல் ஒயிட் புகார் தெரிவித்ததை பார்த்து தான் எனக்கு தைரியம் வந்தது’ என்கிறார் சிம்ரன் சுரி. இந்த ஷைஜித் கானின் கதையை திரைப்படமாக எடுப்பதானால் அதை ட்ரிபிள் எக்ஸ் படமாகத்தான் எடுக்கவேண்டும் போல.

click me!