அறிவுமீது தொடுக்கப்பட்ட அதிகாரம்...! பாஜகவை மென்மையாக தடவிய கவிஞர் வைரமுத்து...!

Published : Aug 22, 2019, 04:19 PM ISTUpdated : Aug 22, 2019, 04:23 PM IST
அறிவுமீது தொடுக்கப்பட்ட  அதிகாரம்...!  பாஜகவை மென்மையாக தடவிய  கவிஞர் வைரமுத்து...!

சுருக்கம்

அதில் ப.சிதம்பரம் கைது என்பது அறிவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அதிகாரம்; என்றும் இந்த கைதை  ஒருபோதும்  ஜனநாயகம் ரசிக்காது என்றும் கூறியுள்ளார் . வழக்கை அவர் சட்டப்படி  எதிர்கொண்டு  இதிலிருந்து விட்டு விடுதலையாவார்  என் நம்புகிறேன் என்றும்  அதில் கூறியுள்ளார். 

ப.சிதம்பரம் கைது என்பது அறிவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் என கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளதுடன், இந்த கைது நடவடிக்கையை கண்டித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த 2007 ஆம் ஆண்டு தான் நிதியமைச்சராக இருந்த போது,   தனக்கிருந்த அதிகாரத்தை பயன்படுத்தி  முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் முறைகேட்டில் ஈடுபட்டார் என்ற புகாரில், நேற்று இரவு  அவரை சிபிஐ கைது செய்தது,  இந்த நிலையில் அவரின் கைது நடவடிக்கை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இதற்கிடையில் பாஜக அரசு உள்ள நோக்கத்துடனும் சிதம்பரத்தை பழிவாங்கும் நோக்கிலும் அவரை கைது செய்துள்ளது என ஒரு பிரிவினர் விமர்சித்து வருகின்றனர், 

ஆனால் எவ்வளவு பெரிய செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும்  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையே இந்த கைது நடவடிக்கை காட்டுகிறது எனவும் கைது நடவடிக்கை சரிதான் என மற்றொரு சாரார் கூறி வருகின்றனர்,  இந்நிலையில் ப. சிதம்பரத்தின் நண்பரும் இலக்கிய ரீதியாக அவருடன்  நெருங்கிப்பழகக் கூடியவருமான  கவிஞர் வைரமுத்து  சிதம்பத்தின் கைது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டித்து  கருத்து பதிவிட்டுள்ளார். அதில் ப.சிதம்பரம் கைது என்பது அறிவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அதிகாரம்; என்றும் இந்த கைதை  ஒருபோதும்  ஜனநாயகம் ரசிக்காது என்றும் கூறியுள்ளார் . வழக்கை அவர் சட்டப்படி  எதிர்கொண்டு  இதிலிருந்து விட்டு விடுதலையாவார்  என் நம்புகிறேன் என்றும்  அதில் கூறியுள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!