சூர்யவம்சம், படத்தில் சுட்டி தனத்தோடு தன்னுடைய குழந்தை நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களிடம் பரட்டை பெற்றவர் பேபி ஹேமலதா. குறிப்பாக இந்த படத்தில் ஹேமலதா நடித்த பாயசம் கொடுக்கும் காட்சி, பேனா இங்க் மேலே படும் போது, வேணும்னா செஞ்சீங்க பரவாயில்லை என பெருந்தன்மையோடு நடந்து கொள்வது தற்போது வரை இவரை ரசிகர்கள் மனதில் நிலைக்க செய்துள்ளது.

ஹேமலதா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படம், 1995 ஆம் ஆண்டு வெளியான 'பாட்ஷா' திரைப்படம் தான். இதில் நடிகர் ரகுவரனுக்கு மகளாக, அதாவது நாகமாவின் சிறியவயது கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
பின் இதை தொடர்ந்து, பூவே உனக்காக, பூமகள் ஊர்வலம், சேது உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும். காதல் கொண்டேன், மதுர, பாரிஜாதம், திமிரு உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்தார்.
மேலும், சித்தி, கனாக்காணும் காலங்கள், தென்றல், போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக இவர் 2015 ஆண்டு ஒளிபரப்பான முந்தானை முடிச்சி சீரியலில் நடித்தார் அதன் பின்னர் எந்த சீரியலிலும் நடிக்க வில்லை. தற்போது இவர் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்.