’எங்களுக்கெல்லாம் யாருமே பொண்ணு குடுக்கமாட்டாங்க பாஸ்’...புலம்பும் ‘முரட்டு சிங்கிள்’பிரேம்ஜி...

சதா சினிமா, மியூசிக்,பார்ட்டி என்று அலைவதால் தனக்கு யாரும் பெண் தரமாட்டார்கள் என்றும் கடைசிவரை ஒரு மொரட்டு சிங்கிளாகவே தன் வாழ்க்கை முடிந்துவிடும் என்றும் அனுதாபம் தேடி அலைகிறார் இசையமைப்பாளரும், பிரபல காமெடி நடிகருமான பிரேம்ஜி அமரன்.

actor premji declares about his marriage

சதா சினிமா, மியூசிக்,பார்ட்டி என்று அலைவதால் தனக்கு யாரும் பெண் தரமாட்டார்கள் என்றும் கடைசிவரை ஒரு மொரட்டு சிங்கிளாகவே தன் வாழ்க்கை முடிந்துவிடும் என்றும் அனுதாபம் தேடி அலைகிறார் இசையமைப்பாளரும், பிரபல காமெடி நடிகருமான பிரேம்ஜி அமரன்.actor premji declares about his marriage

கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி ’சென்னை 28’, ’சரோஜா[’, ’கோவா’, ’மங்காத்தா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது வெங்கட் பிரபுவின் ’பார்ட்டி’ மற்றும் ’ஜோம்பி’ படத்தில் இசையமைத்துள்ளார். தான் இசையமைக்கும் ஒவ்வொரு படத்துக்கும் தனக்குத் தானே விதவிதமான பட்டங்களைச் சூட்டி மகிழ்ந்துகொள்ளும் அவர் ‘ஜோம்பி’படத்துக்கு தனக்கு ‘இசைக் காட்டேரி’என்று பயங்கர பட்டம் சூட்டுக்கொண்டுள்ளார்.

Latest Videos

ப்ரேம்ஜி தான் இன்னும் பேச்சுலராகவே இருப்பது குறித்து உற்சாகமாகவே உள்ள நிலையில், 40வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லையே என்று அவரைவிட அவரது ரசிகர்கள் கவலைப்பட்டு வருகின்றனர். இவர் கடந்த மாதம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் திருமணமான புகைப்படத்துடன் ’கேம் ஓவர்’ என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டை அணிந்திருந்தார். அதனால் அவர் விரைவில் திருமணத்திற்குத் தயாராகிவிட்டார் என்று வாழ்த்து மழை பொழிந்தது. இந்த நிலையில், ‘ஜோம்பி’பட ஆடியோ வெளியீட்டு விழாவில்  இதுகுறித்துப் பேசிய  அவர் , ’கேம் ஓவர்’ என்ற டி-சர்ட் அணிந்து ஒரு பதிவிட்டேன். அதனால், என் பிரம்மச்சரியக் கதை முடிந்துவிட்டது என்ற எண்ணத்தில்  நிறைய பேரிடம் இருந்து வாழ்த்துகள் வந்தன. பலர் என்னைத் தொடர்பு கொண்டு யார் அந்த பெண், எப்போது திருமணம் என்றெல்லாம் கேட்டார்கள். உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.நான்  இன்னும் நான் முரட்டு சிங்கிள் தான். அதனால் தான் முரட்டு சிங்கிள் என்ற டி-சர்ட் அணிந்து வந்திருக்கிறேன். எனக்கு யாரும் பெண் தருவார்கள் என்ற நம்பிக்கையில்லை எனவே நான் எப்போதுமே முரட்டு சிங்கிள் தான்’என்கிறார் பிரேம்ஜி.

’அத்திவரதர் மனசு வச்சாத்தான் என் பையனுக்குக் கல்யாணம் நடக்கும்’என்று சமீபத்தில் தந்தை டி.ராஜேந்தரால் சர்டிபிகேட் தரப்பட்ட சிம்புவும், பிரேம்ஜியும் நெருங்கிய நண்பர்கள், அடிக்கடி பார்ட்டிகளுக்கு ஒன்றாகச் செல்லக்கூடியவர்கள் என்பதைப் பெண் வீட்டார்களுக்கு இந்த இடத்தில் ’போட்டு’க்கொடுக்கிறோம்.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image