சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வந்த உதயம் திரையரங்கம் மூடப்படுவதற்கு வருத்தம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
சென்னையில் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றாக திகழ்ந்து வந்தது உதயம் தியேட்டர். மூன்று திரைகளுடன் இயங்கி வந்த இந்த தியேட்டர் சென்னையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. இந்த தியேட்டரை வைத்து சினிமாவில் பாடல்கள் எழுதும் அளவுக்கு பேமஸ் ஆக இருந்தது உதயம் தியேட்டர். அத்தகைய பெருமைமிகு தியேட்டராக திகழ்ந்து வந்த உதயம் தற்போது மூடுவிழா கண்டுள்ளது.
உதயம் தியேட்டருக்கான மக்கள் வருகை குறைந்ததால் அதனை கட்டுமான நிறுவனம் ஒன்றிற்கு விற்றுள்ளனர். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டதாம். உதயம் தியேட்டர் இருந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று வர உள்ளதாம். இந்த தகவல் சென்னை மக்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் ஆக அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்... சென்னை மக்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்... புகழ்பெற்ற உதயம் திரையரங்கம் மூடப்படுகிறது - பின்னணி என்ன?
அசோக் நகரின் அமைந்திருந்த உதயம் தியேட்டர் இடிக்கப்பட உள்ள செய்தி அறிந்து பலரும் அந்த திரையரங்கம் பற்றிய தங்களுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்துவும் உதயம் தியேட்டர் மூடுவிழா கண்டுள்ளதை அறிந்து தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதில், “ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது; இதயம் கிறீச்சிடுகிறது. முதல் மரியாதை, சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன், ரோஜா என்று நான் பாட்டெழுதிய பல வெற்றிப் படங்களை வெளியிட்ட உதயம் திரைவளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன. மாற்றங்களின் ஆக்டோபஸ் கரங்களுக்கு எதுவும் தப்ப முடியாது என்று மூளை முன்மொழிவதை இதயம் வழிமொழிய மறுக்கிறது. இனி அந்தக் காலத் தடயத்தைக் கடக்கும் போதெல்லாம் வாழ்ந்த வீட்டை விற்றவனின் பரம்பரைக் கவலையோடு என் கார் நகரும். நன்றி உதயம்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது;
இதயம் கிறீச்சிடுகிறது
முதல் மரியாதை, சிந்து பைரவி,
பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன்
ரோஜா என்று
நான் பாட்டெழுதிய
பல வெற்றிப் படங்களை
வெளியிட்ட உதயம் திரைவளாகம்
மூடப்படுவது கண்டு
என் கண்கள்
கலைக் கண்ணீர் வடிக்கின்றன
மாற்றங்களின்
ஆக்டோபஸ் கரங்களுக்கு… pic.twitter.com/ckGwDDD6bC
இதையும் படியுங்கள்... அஜித்தும் சிவகார்த்திகேயனும் இணைந்து நடித்தும் அட்டர் பிளாப் ஆன திரைப்படம் - அது எந்த படம் தெரியுமா?