சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவு.. நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்..

Published : Feb 14, 2024, 05:04 PM IST
சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவு.. நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்..

சுருக்கம்

சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார் டிரைவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். 

வெற்றி துரைசாமியின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. 8 நாட்களாக தேடுதல் வேட்டை நடைபெற்றது. மகனின் உடலை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக அறிவித்தார் சைதை துரைசாமி. சில நாட்களுக்கு முன்பு வெற்றியின் உடைகள் இருந்த பெட்டி போன்றவை கண்டெடுக்கப்பட்டது. 

ரத்தக்கறை மாதிரிகளை வைத்து டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விபத்து நடந்த 8 நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் நேற்றைய தினம் கண்டெடுக்கப்பட்டது. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் மீட்கப்பட்டது. பாறையின் அடியில் உடல் சிக்கியிருந்த நிலையில், மீட்பு படை வீரர்கள் அவரது உடலை கண்டுபிடித்தனர். 

வெற்றி துரைசாமியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ஆளுநர் ஆர் என் ரவி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் இன்று சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?