“நெஞ்சு பொறுக்குதில்லையே!”.. இயக்குநர் கே.பாக்யராஜ் சொன்ன கதை.. உண்மை என்ன? கோவை எஸ்.பி விளக்கம்!

By Raghupati R  |  First Published Feb 13, 2024, 11:54 PM IST

இயக்குநர்  கே.பாக்யராஜ் சமீபத்தில் பேசி வெளியிட்ட நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற வீடியோ குறித்து கோவை மாவட்ட எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார்.


தமிழ் நடிகரும், இயக்குநருமான கே. பாக்கியராஜ் நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற ஒரு வீடியோவில் மேட்டுப்பாளையம் பத்தரகாளி அம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள அம்பரம்பாளையம் ஆற்றில் குளிக்க செல்பவர்களை சிலர் ஆற்றில் மூழ்கடித்து கொல்வதாகவும் அவர்களின் உடலை மீட்க பணம் பெருவதாகவும் கூறியிருந்தார். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளர். 

Tap to resize

Latest Videos

இதுதொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “திரு,பாக்யராஜ் அவர்களின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றதாகும். அப்படி சம்பவம் என்று ஒன்றுகூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை. பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ஆற்றில் 2022, 2023ல் எவ்வித உயிரிழப்பு சம்பவமும் நடக்கவே இல்லை.

2022ல் பவானி ஆற்றில் எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆகும். இதனையடுத்து தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படையால் பயிற்சிபெற்ற 10 காவலர்களை உள்ளடக்கிய, ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான 'மேட்டுப்பாளையம் உயிர் காக்கும் காவல் படை' 2023 பிப்ரவரியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 2023ல்

பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்தது. 2024ல் உயிரிழப்புகளே இல்லை. இப்படை, ஆற்று வெள்ளப் பெருக்கிலிருந்து 914 பேரை அப்புறப்படுத்திக் காப்பாற்றியுள்ளது. 13 பேரை தற்கொலையிலிருந்து காப்பாற்றி, மன நல ஆலோசனைவழங்கியிருக்கிறது.

பவானி ஆற்றங்கரையில் 19 அபாய பகுதிகள் கண்டறியப்பட்டு, எச்சரிக்கைப் பலகைகள், சிசிடிவி கேமரா, ரோந்து ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன. எனவே, மேற்கண்ட தகவல் பொய்யானதும் வதந்தியும் ஆகும். இவற்றை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச் செயல்கள் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

click me!