வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற விஜய்..! வாசலோடு திரும்பிய சோகம்... என்ன ஆச்சு?

Published : Feb 13, 2024, 09:23 PM IST
வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற விஜய்..! வாசலோடு திரும்பிய சோகம்... என்ன ஆச்சு?

சுருக்கம்

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடலுக்கு தல அஜித்தை தொடர்ந்து தளபதி விஜய் அஞ்சலி செலுத்த சென்ற நிலையில், வாசலோடு திரும்பியதாக தகவல் கிடைத்துள்ளது. ஏன்? என்ன ஆச்சு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி. இவர் தன்னுடைய நண்பர்களுடன் இமாச்சல பிரதேசத்துக்கு கடந்த மாதம் சுற்றுலா சென்றிருந்தார். சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு கடந்த பிப்ரவரி 4-ந் தேதி சென்னைக்கு காரில் திரும்பிய போது... கசாங் நாளா என்கிற பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறிய கார் சட்லெஜ் நதியில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், வெற்றியின் நண்பர் கோபிநாத் பலத்த காய்த்துடன் உயிர் தப்பினார். ஆனால் வெற்றி துரைசாமி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் அவரை தேடும் பணி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்று வந்தது. தன்னுடைய மகனை அடையாளம் கண்டு கூறினால் 1 கோடி சன்மானம் கிடைக்கும் என சைதை துரைசாமி கூறியதை தொடர்ந்து, சில தர்ணார்வலர்களும் , ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நேற்றைய தினம் அதாவது கிட்டத்தட்ட 8 நாட்களுக்கு பின் வெற்றி துரைசாமியின் உடல் சட்லெஜ் நதியில் இருந்து 6 கிலோமீட்டருக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பிரபலம் தான் சனம் ஷெட்டியின் காதலரா? வெளியான ரொமான்டிக் போட்டோ ஷூட்.. பட் இந்த ட்விஸ்ட் எதிர்பாக்கல பாஸ்!

தண்ணீர் இடையே உள்ள பாறையின் இடுக்கில் உடல் சிக்கி இருந்ததால்... உடலை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த பாறையில் இடுக்கிக்கே சென்று நீச்சல் வீரர் ஒருவர் வெற்றி துரைசாமியின் உடலை பத்திரமாக மீது வந்தார். இதை தொடர்ந்து இன்று சென்னை கொண்டுவரப்பட்ட வெற்றி துரைசாமியின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், வெற்றி துரைசாமியின் நெருங்கிய நண்பரும், நடிகருமான நடிகர் அஜித்தும் வெற்றி துரைசாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளார்.

 

உங்க Rent-தான் என்னோட சம்பளமே.! VJ பார்வதியின் 1 மாத செலவை பார்த்து ஷாக்கான நெட்டிசன்கள்! குவியும் கமெண்ட்ஸ்!

இதை தொடர்ந்து, தளபதி விஜய்யும் மறைந்த வெற்றி துரைசாமி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற நிலையில், வீட்டு வாசலுடன் அஞ்சலி செலுத்த முடியாமல் கிளம்பியதாக கூறப்படுகிறது. கூட நெரிசல் காரணமாக, வெற்றியில் உடலுக்கு அஞ்சலி செலுத்தாமல் திரும்பியுள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!