ஏன் திருமணம் நின்றது....??? உண்மையை வெளியிட்ட வைக்கம் விஜயலட்சுமி....

 
Published : Mar 01, 2017, 04:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
ஏன் திருமணம் நின்றது....??? உண்மையை வெளியிட்ட வைக்கம் விஜயலட்சுமி....

சுருக்கம்

vaikomvijayalakshmi open talk about marriage drop

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி தன்னுடைய இனிமையான குரலால் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர். இவர் குரலில் உள்ள தனித்தன்மை கொண்டது. சமீபத்தில் இவர் பாடிய சொப்பன சுந்தரி பாடல் செம ஹிட் ஆனது.  

கேரளாவை பிறப்பிடமாக கொண்டாலும் தமிழில் தெள்ளத் தெளிவாக பாட கூடியவர் விஜயலட்சுமி.

இவருக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து மார்ச் மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது . ஆனால் ஒரு சில காரணங்களால் திருமணம் நின்று விட்டது என விஜயலட்சுமியின் தந்தை கூறினார்.

இது குறித்து தற்போது முதல் முறையாக மனம் திறந்துள்ள வைக்கம் விஜயலட்சுமி கூறுகையில்....தான் இப்போது நிம்மதியாக இருக்கிறேன் என  கூறி  அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும் சந்தோஷ் தனக்கு  சினிமாவில் பாட  சான்ஸ் தொடர்ச்சியாக வராது.அதற்கு எந்த  உத்திரவாதமும் கிடையாது. எனவே அரசு இசை பள்ளிக்கூடத்தில் சேர்ந்து டீச்சர் ஆகிவிட்டால் கடைசி வரை சம்பளம், பென்ஷன் வரும் என கூறினார்.

இது என் மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. நிச்சயதார்த்தத்துக்கு முன் பேசியபடி இல்லாமல் திடீரென மாற்றிப்பேசுகிறார். இசையை விட திருமணம் பெரியதாக தெரியவில்லை. எனவே இப்படியொரு முடிவை எடுத்துவிட்டேன் என கூறியிருகிறார் விஜயலட்சுமி

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரோகிணிக்கு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்... கடனில் தத்தளிக்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
எதிர்நீச்சலில் போகப்போகும் அந்த பெரிய உசுரு யார்? யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் லோடிங்