கலாச்சார விழாவில்.... 20 வருடம் கழித்து எலிசபெத் ராணியை சந்தித்த கமல்....

First Published Mar 1, 2017, 11:41 AM IST
Highlights
20 years back kamal meet elisabath rani


இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா நேற்று மாலை லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் நடைபெற்றது.

இங்கிலாந்து ராணி எலிசபெத் துவக்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் முக்கிய விருந்தினர்களில் ஒருவராக உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து கமல்ஹாசன் கூறுகையில்....  பிரதமர் மோடி தனது பெயரை இந்த கலாச்சார விழாவிற்கு  முன்மொழிந்ததை மிகப் பெரும் கவுரவமாகக்  கருதுகிறேன் என்றும்.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான வரலாற்றை, கலாச்சார விழாவாக கொண்டாடும் இந்த தருணம்  மிகச்சிறந்தது. இந்தியாவில் உள்ள பல மொழிகளை இணைக்கும் பாலமாக ஆங்கிலம் இருப்பது சிறப்பான ஒன்று என்று கமல்ஹாசன் கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ், உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மருதநாயகம்' தொடக்கவிழா நடந்து சரியாக 20 வருடம் ஆகியுள்ள நிலையில் மீண்டும் இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொள்ளும் விழாவில் கமல் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!