நாடே திட்டுது...எம்.எல்.ஏகளுக்கு சுத்தமா வெட்கமே இல்லையா...???அசிங்கபடுத்திய ஆர்.ஜே.பாலாஜி....

 
Published : Mar 01, 2017, 10:07 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
நாடே திட்டுது...எம்.எல்.ஏகளுக்கு சுத்தமா வெட்கமே இல்லையா...???அசிங்கபடுத்திய ஆர்.ஜே.பாலாஜி....

சுருக்கம்

r.j.balaji about tamilnadu politicians

காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து தன்னுடைய மனதில் பூட்டி வைத்திருந்தஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.

ஆர்.ஜேபாலாஜி கடந்த வருடம் சென்னையில் வெள்ளம் வந்த போது, பொது மக்களுக்காக 1 கோடி ரூபாய் முதல் செலவு செய்து உதவிகள் செய்தார். அதே போல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சாப்பாடு மற்றும் அத்தியாவசிய செலவுக்காகளுக்கு செலவு செய்து, ஜல்லிகட்டுகாக போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பாலாஜி தமிழ்நாட்டில் சில நாட்களாக அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு மாதங்களில் நிறைய விஷயம் பார்த்துட்டோம். இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு முன்னர் ஒரு 15 நிமிடம் காமெடியாக பேசுமாறு என்னிடம் கூறினார்கள்.

ஆனால் இப்ப காமெடி வேண்டுமானால் செய்தி சேனல்களைத்தான் பார்க்க வேண்டும். கவுண்டமணி காமெடியை விட செய்தி சேனலில் பேசுபவர்கள் காமெடி செய்கின்றனர் என கூறினார்.

மேலும் ரிசார்ட்டில் இருக்கும் எம்.எல்.ஏக்களை இன்னொரு பிரிவினர் திட்டுகின்றனர். பின்னர் அதே எம்.எல்.ஏக்களில் ஒருவர் இந்த பக்கம் வந்தவுடன் அவரை வாழ்த்துகின்றனர்.

நான் மாணவர்களை அரசியலுக்கு வருமாறு தூண்டிவிட்டதாக ஒருசிலர் கூறுகின்றனர். அரசியல் என்பது ஆசை இல்லை அது அழிவு.  நான் யாரையும் அசிங்கமா பண்ண தூண்டிவிடலை. அரசியலுக்கு வர தூண்டுவது ஒரு தவறா?

ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் அரசியலுக்கு நம்மை போன்றவர்கள் வருவதற்கு பயப்படுகின்றனர். வெட்கம், மானம், சூடு, சொரணை, பயம் உள்ள சாதாரண குடும்ப வாழ்க்கையில் இருக்கும் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள். அய்யய்யோ ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு பயம். அதனால் அரசியலுக்கு வருவது இல்லை.

ஆனால் இன்னைக்கு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு எம்எல்ஏவையும், ஒவ்வொரு அரசியல்வாதியையும் ஊரே திட்டுது, நாடே திட்டி அசிங்கப்படுத்தது. ஆனால் இவங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை என்பதை பார்க்கும்போது மனம் வருத்தமாக உள்ளது என கோவமாக பேசினார் ஆர்.ஜே.பாலாஜி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரிலீஸ் ஆனபோது யாரும் பார்க்கல, இப்போ புகழ்கிறார்கள்'; கமல் படம் பற்றி ஆதங்கப்பட்ட ஸ்ருதிஹாசன்
ஜனநாயகன் ஆடியோ லாஞ்சுக்கு இத்தனை கட்டுப்பாடுகளா? விஜய்க்கு செக் வைத்த மலேசியா அரசு..!