எங்கிட்டுப்போனாலும் கேட்டைப் போடுறாய்ங்களே... வடிவேலுவுக்கு நூலிபான்கள் செக்... குமுறும் ரசிகர்கள்..!

Published : Sep 17, 2021, 10:45 AM IST
எங்கிட்டுப்போனாலும் கேட்டைப் போடுறாய்ங்களே... வடிவேலுவுக்கு நூலிபான்கள் செக்... குமுறும் ரசிகர்கள்..!

சுருக்கம்

சதீஷ், இப்போவும் ஒன்னும் கெட்டுப்போகல.வடிவேலு ஹீரோவா நடிக்கட்டும் இப்படத்தில்.நீ வேணும்னா அல்வா வாசு இருந்த காலி இடத்துல வடிவேலுவுக்கு அசிஸ்டெண்டா நடி


நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு தமிழ் திரையுலகில்  ரீ-எண்ட்ரி ஆகியுள்ள நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு நாய் சேகர் என்ற டைட்டிலை வைக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால், சதீஷ் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ஏற்கெனவே நாய் சேகர் என்ற டைட்டில் வைத்திருப்பதால் வடிவேலு படத்திற்கு நாய் சேகர் என்ற டைட்டில் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்தப்படத்தில் நடிகர் சதீஷ் கதையின் நாயகனாகவும் ‘குக் வித் கோமாளி’உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனம் கவர்ந்த பவித்ரா லட்சுமி கதாநாயகியாகவும் நடிக்கும் புதியபடமொன்று தயாராகியுள்ளது. பல குறும்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களை இயக்கியவரும், யார்க்கர் ஃபிலிம்ஸ் எனும் யூடியூப் சேனலை நடத்தி வருபவருமான கிஷோர் ராஜ்குமார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் 21 ஆவது படைப்பாகத் தயாராகியுள்ளது. இந்தப்படத்துக்கு நாய்சேகர் என்று பெயர் வைத்து படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டார்கள். இந்நிலையில், 4 வருடங்களாக நடிக்காமல் இருந்த வடிவேலு திரும்ப நடிக்கவந்திருக்கிறார். சுராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

அந்தப்படத்துக்கும் நாய்சேகர் என்று பெயர் வைத்திருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், சதீஷ் நடிக்கும் படத்தின் பெயரையும் முதல்பார்வையையும் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். நாய்சேகர் என்ற பெயருடனும், வடிவேலு சாரின் ரசிகனாக இந்த முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி. சதீஷ் உங்கள் பொறுப்பு அதிகமாகிவிட்டது சிறப்பாக செய்யுங்கள்,படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள் என்றும் சொல்லியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதனால் வடிவேலுவுக்கு வேறு தலைப்பை மாற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அநேகமாய் நாய் சேகர் என்ற பெயருடன் மீண்டும் நாய் சேகர், நாய் சேகர் ரிட்டர்ன் போன்ற வார்த்தைகள் இணைக்கப்பட்டு வடிவேலு நடிக்கும் படத்தின் பெயர் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து வடிவேலு ரசிகர்கள் கொதித்துப்போயுள்ளனர். ‘’சதீஷ், இப்போவும் ஒன்னும் கெட்டுப்போகல.வடிவேலு ஹீரோவா நடிக்கட்டும் இப்படத்தில்.நீ வேணும்னா அல்வா வாசு இருந்த காலி இடத்துல வடிவேலுவுக்கு அசிஸ்டெண்டா நடி’’ என்றும் “நாய் சேகர்” என்பது வடிவேலு உருவாக்கியது. அவரை தவிர வேறுஎந்த திருட்டு பயலுக்கும் இது பொருந்தாது. இந்த அரைகுறை நூலிபான் கூட்டம் செய்வது திருட்டு மொள்ளமாரித்தனம். நீ ஒத்து ஊதுறியா?அத்தனை பயலும் திருட்டு பசங்க.வடிவேலு நடிக்கவேகூடாதுனு திரியுரானுவ’’ என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Keneeshaa: உருகி உருகி காதலித்த ரவி மோகன்... பிரேக் அப் பண்ணிய கெனிஷா? பிரிவுக்கு காரணம் என்ன?
Siragadikka Aasai : மனோஜுக்கு வில்லியாக மாறிய விஜயா... வக்கீல் பார்த்த கோல்மால் வேலை