ஆட்டம் ஆரம்பம்... 'ருத்ரதாண்டவம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Published : Sep 16, 2021, 06:26 PM IST
ஆட்டம் ஆரம்பம்... 'ருத்ரதாண்டவம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

சுருக்கம்

சமீபத்தில் இயக்குனர் மோகன் இரண்டாவது முறையாக ரிச்சர்டை வைத்து இயக்கியுள்ள 'ருத்ரதாண்டவம்' படத்தின் ட்ரைலர் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.  

சமீபத்தில் இயக்குனர் மோகன் இரண்டாவது முறையாக ரிச்சர்டை வைத்து இயக்கியுள்ள 'ருத்ரதாண்டவம்' படத்தின் ட்ரைலர் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குனர் மோகன்ஜி தன்னுடைய முதல் படமான 'திரௌபதி' படத்தை கிரௌட் பண்டிங் மூலம் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நாடக காதல் குறித்து இவர் தோலுரித்திருந்தததற்கு சிலர் மத்தியில், எதிர்ப்புகள் கிளம்பினாலும், இந்த படத்திற்கு அமோகமான வரவேற்பு இருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது, இரண்டாவது படத்தையும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத விதத்தில் இயக்கியுள்ளார்.

'ருத்ரதாண்டவம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், தன்னுடைய முதல் பட நாயகனான ரிச்சர்டை தான் மீண்டும் கதாநாயகனாக வைத்து இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இதில், மத மாற்றம் பற்றி இவர் பேசிய விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டும் இல்லாமல், இயக்குனர் மோகன் ஜி மத கலவரத்தை தூண்டும் வகையில் படம் எடுத்துள்ளதாகவும் அவரை கைது செய்யவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளும் எழுந்தது.

ஒரு தரப்பினர் இந்த படத்தை எதிர்த்தாலும், மற்றொரு தரப்பினர் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் சற்று முன்னர் 'ருத்ரதாண்டவம்' படம் ரிலீஸ் குறித்து இயக்குனர் மோகன்ஜி அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், "திரௌபதி’ தாய் மற்றும் ஈசன் துணையுடன் உலகம் முழுவதும் அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் ஆட்டம் ஆரம்பம் என்று மோகன்ஜி தெரிவித்துள்ளார்". இதை தொடர்ந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது.

iஇந்தப் படத்தில், நாயகனாக நடித்திருக்கும் ரிச்சர்டுக்கு ஜோடியாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா நடித்துள்ளார், மேலும் ராதாரவி, கருணாஸ் உள்பட பலர் ,முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?