
ஏற்கனவே 'நாய் சேகர்' என்கிற படத்தின் தலைப்பு, நடிகர் சதீஷ் நடித்து வரும் படத்திற்கு வைக்கப்பட்டு முறையாக பதிவு செய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்று மாலை இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளதாக கூறியதை தொடர்ந்து, என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. இதை தொடர்ந்து 'நாய் சேகர்' படத்தின் தலைப்பு சதீஷ் நடிக்கும் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் பெயர் 'நாய் சேகர்' என்று கடந்த இரண்டு வருடங்களாகவே ஒரு தகவல், உலா வந்தாலும் இதனை படக்குழுவினர் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யாமல் இருந்தனர். எனவே, சதீஷை வைத்து ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வரும் காமெடி படத்திற்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும் என எண்ணி படக்குழுவினர் இந்த தலைப்பை முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து, அந்த பெயரை தங்களதாக்கி கொண்டனர்.
சதீஷ் மற்றும் ஒரு நாயை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுவதால், இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும் என எண்ணி படக்குழுவினர் இந்த தலைப்பை உறுதி செய்ததாக கூறப்படுகிறது. ஒரு வழியாக, வடிவேலுவின் அனைத்து பிரச்சனைகளும் முடிவடைந்து, சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க வந்த போது, சதீஷின் படத்திற்கு இந்த தலைப்பு வைக்கப்பட்ட விவரம் வெளியாகி ஒட்டு மொத்த பட குழுவையும் அதிர்ச்சியடைய செய்தது.
மேலும் இந்த தலைப்புக்காக நடிகர் வடிவேலு ஏ.ஜி.எஸ் நிறுவனத்திடம் தனக்கு விட்டு கொடுத்துவிடுமாறும் கேட்டு பிரச்சனை செய்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால் ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த தலைப்பு தான் தங்களின் படத்திற்கு நன்றாக இருக்கும் என உறுதியாக இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகும் என தெரிவித்ததை தொடர்ந்து, இந்த படத்திற்கு 'நாய் சேகர்' டைட்டில் வைக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.
எவ்வளவு கேட்டும் வடிவேலுவுக்கு தராமல் விடாப்பிடியாக சதீஷ் நடிக்கும் படத்திற்கு 'நாய் சேகர்' என்கிற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஃபர்ஸ்ட் லுக் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் சதீஷுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.