
பொல்லாதவன், ஆடுகளம் என்ற ஹிட் மெட்டீரியலை கொடுத்த வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான வடசென்னை திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என அந்த படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான தனுஷ் தனது த்விட்டேர் பக்கத்தில் கூறியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான வடசென்னை திரைப்படம் பிரமாண்ட வெற்றி படமாக அமைந்தது. விமர்சனம் மற்றும் வணீக ரீதியாக மெகா ஹிட் அடித்தது, படத்தின் கதை மிக நீளம் என்பதால் இதை மூன்று, நான்கு பாகங்களாக எடுக்க பிளான் போட்டது தயாரிப்பு தரப்பு, இந்நிலையில் அடுத்த பாகம் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் படைப்பு எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை தழுவி அசுரன் படம் உருவாக்கி வருகிறது. இந்த குறுகியகால அதயாரிப்பக உருவாகும் இந்த படத்தால் வடசென்னை படத்தின் 2-ம் பாகம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவின.
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் தனுஷிடம் சமூகவலைத்தளங்களில் கேள்விகேட்டு நிலையில் தனுஷ் ஒரு டுவீட்டை பதிவிட்டு ரசிகர்களை தெளிவுபடுத்தியுள்ளார். அதில்; இந்நிலையில், அதில் கூறப்பட்டுள்ளதாவது:- “என் ரசிகர்களிடையே இந்தக் குழப்பம் ஏற்பட காரணம் எதுவென்று தெரியவில்லை. வடசென்னை 2-ம் பாகம் உருவாகும். அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால் நானே எனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிப்பேன். அதுவரை படங்கள் குறித்த எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம், நன்றி, லவ் யூ என்று பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் வடசென்னை படத்தின் 2-ம் பாகம் உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தனுஷின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.