’நடிகர் சூர்யா ஒரு சரியான அரைவேக்காடு’...அமைச்சர் கடம்பூர் ராஜூ செம காட்டு...

Published : Jul 15, 2019, 05:58 PM IST
’நடிகர் சூர்யா ஒரு சரியான அரைவேக்காடு’...அமைச்சர் கடம்பூர் ராஜூ செம காட்டு...

சுருக்கம்

தமிழக அரசின் கல்விக்கொள்கை குறித்து ஒரு நடிகரான சூர்யாவுக்கு என்ன தெரியும்? அவர் ஒரு சரியான அரைவேக்காடு’ என்று விளாசியிருக்கிறார் தமிழக அரசின் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ. அமைச்சரிம் இந்த கடுமையான விமர்சனத்தால் சூர்யா ரசிகர்கள் கொந்தளிப்பின் உச்சத்தில் உள்ளனர்.  

தமிழக அரசின் கல்விக்கொள்கை குறித்து ஒரு நடிகரான சூர்யாவுக்கு என்ன தெரியும்? அவர் ஒரு சரியான அரைவேக்காடு’ என்று விளாசியிருக்கிறார் தமிழக அரசின் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ. அமைச்சரிம் இந்த கடுமையான விமர்சனத்தால் சூர்யா ரசிகர்கள் கொந்தளிப்பின் உச்சத்தில் உள்ளனர்.

சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட சூர்யா புதிய கல்விக்கொள்கை, அரசுப் பள்ளிகளின் அவலங்கள், நீட் நுழைவுத் தேர்வு உள்ளிட்டவை குறித்து தனது கருத்துக்களை முன்வைத்தார். இதற்கு மத்திய - மாநில ஆளுங்கட்சி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது தமிழக அமைசர் கடம்பூர் ராஜூவும் சூர்யாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.மேலும் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் இதை எதிர்க்காவிட்டால் அவர்கள் மீது இது திணிக்கப்படும் என எச்சரிக்கைவிடுத்ததோடு இதை சரியான முறையில் கையாள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 
 
ஆனால், சூர்யாவின் இந்த பேச்சுக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சூர்யாவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, கிராமப்புற ரசிகர்களுக்காக சூர்யா தனது படத்தின் டிக்கெட் விலையை குறைப்பாரா? தங்கள் படத்தின் விளம்பரத்துக்காகவும் அரசியல் நுழைவுக்காகவும் அவசரமாக கருத்து கூறுகிறார்களா? என கேட்டுள்ளார். அதோடு தமிழகத்தில் எல்லா கட்சிகளும் மக்கள் வளர்ச்சிக்கு எதிராக அரசியல் செய்கிறார்கள். புதியக் கல்விக்கொள்கையை சூரியக்கட்சிக்காரரும் விமர்சிக்கிறார். இப்போது சூர்யாவும் விமர்சிக்கிறார். ஒரு விஷயத்தை ஆராயமலேயே எல்லோரும் விமர்சிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். 
 
சூர்யா பட விளம்பரத்திற்காக இப்படி பேசுபவர் கிடையாது. அவர் நடத்தி வரும் அரக்கட்டளை மூலம் மாணவர்ள் படிப்பதால் அவர்களின் கஷ்டத்தை புரிந்துக்கொண்டு அதை வெளியே கூறி இருக்கிறார் என தமிழிசைக்கு சூர்யா ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இந்நிலையில் தற்போது, தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது,’கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும்?  நன்கு தெரிந்துகொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம்.. அரைவேக்காட்டுத்தனமாகப் பேசுபவர்களுக்கு எப்படி பதிலளிக்க முடியும் என்று மிகக் காட்டமாகத் தாக்கிப்பேசினார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜன நாயகன் முதல் பராசக்தி வரை: பொங்கலுக்கு போட்டி போடும் டாப் படங்களின் பட்டியல்!
என்னை மன்னிச்சிடு கார்த்திக்; நீ இல்லாமல் வாழ முடியாது; விஷம் குடித்து உயிருக்குப் போராடும் ரேவதி!