அமெரிக்காவை சேர்ந்த 16 வயது இளம் நடிகையான கைலியா போசே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில், பிரபலமான ''Toddlers and Tiaras'' என்ற தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இளம் நடிகை, கைலியா போசே இந்த நிகழ்ச்சியில் நடித்ததின் மூலம் மக்கள் மத்தியில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்.
கோடிக்கணக்கில் சொத்து?
இவர் கோடீஸ்வரரின் ஒரே மகள் என்று சொல்லப்படும் நிலையில், இவரின் சொத்து மதிப்பு $1.5 மில்லியன் ஆகும்.இந்த நிலையில், கைலியாவின் தற்கொலை செய்தி அவரது குடும்பத்தாரை நிலை குலைய வைத்துள்ளது.
இறப்பு குறித்து கைலியா குடும்பத்தார் அறிக்கை:
இவரது இறப்பு குறித்து கைலியா குடும்பத்தார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், அவர்கள் எங்களது திறமையும், அழகும் நிறைந்த பெண்ணானகைலியா போசே எங்களை விட்டு சென்றுவிட்டாள்.
சோகத்தில் கைலியாவின் ரசிகர்கள்:
கைலியாவின் மரணம் எங்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. என்ன சொல்வது என்றே எங்களுக்கு தெரியவில்லை. இந்த நேரத்தில் எங்களை தொல்லை செய்யாமல், எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மதித்து தொல்லை கொடுக்காதீர்கள் என்று பதிவு செய்துள்ளார். இந்த செய்தி கேட்டு அவரின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும், கைலியா கார் விபத்து காரணமாக உயிரிந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில், இது முற்றிலும் பொய்யானது அவர் ஒரு சில பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
கொலையா..? தற்கொலையா..?
இருப்பினும், இது தொடர்பான வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இது கொலையா..? விபத்தா..? இல்லை தற்கொலையா..? என்று உண்மையை கண்டறிய பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதன் உண்மை தன்மை விரைவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.