
லால் சலாம், லவ்வர், வடக்குப்பட்டி ராமசாமி, சைரன் உள்ளிட்ட படங்கள் இந்த மாதம் வெளியாகின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லால் சலாம் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதே போல் சைரன் படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ள புதிய படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாம்பாட்டி :
வடிவுடையான் இயக்கி உள்ள இந்த படத்தில் ஜீவன், மல்லிகா ஷெராவத் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தி பாய்ஸ்:
கஜினிகாந்த், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் அடுத்து இயக்கி உள்ள படம் தி பாய்ஸ். இந்த படத்தில் சந்தோஷ் பி ஜெயக்குமார், ஷாரா, ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டார்க் காமெடி அடல்ட் திரைப்படமாக உருவாகி உள்ள இந்த படம் வரும் 23-ம் தேதி வெளியாக உள்ளது.
ரணம்
ஷெரிஃப் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ரணம். இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கிரைம் த்ரில்லராக உருவாகி உள்ள இந்த பட வரும் வரும் 24-ம் தேதி வெளியாக உள்ளது.
பைரி
ஜான் கிளாடி இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் சையது மஜீத், மேக்னா எலன், விஜி சேகர் உட்பட பலர் நடித்துள்ள படம் பைரி. டி.கே புரொட்க்ஷன்ஸ் சார்பில் இந்த படத்தை வி துரைராஜ் தயாரித்துள்ளார். புறா பந்தயத்தை மையமாக உருவாகி உள்ள இந்த படம் வரும் 232-ம் த்யேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வித்தைக்காரன்
அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சதீஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் வித்தைக்காரன். ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே விஜய் பாண்டி இந்த படத்தை தயாரித்துள்ளார். இதில் சிம்ரன் குப்தா, ஆனந்த் ராஜ், சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஆபரேஷன் லைலா
ஸ்ரீ காந்த் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஆபரேஷன் லைலா. இந்த படத்தில் ஸ்ரீ காந்த், சகிதா ஷர்மா, இமான் அண்ணாச்சி, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். ஹாரர் திரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தை செல்ரின் புரொடக்ஷன் சார்பில் செல்வம் பொன்னையன் தயாரித்துள்ளார். இந்த படமும் வரும் 23-ம் தேதி வெளியாக உள்ளது.
கிளாஸ்மேட்ஸ்
மறைந்த நடிகர் மயில்சாமி கடைசியாக நடித்த படம் தான் கிளாஸ்மேட்ஸ். குட்டிப்புலி சரவண சக்தி இயக்கி உள்ள இந்த படத்தில் அங்கையர் கண்ணன், அபி நக்ஷ்த்ரா, சரவண சக்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பர்த்மார்க் :
விக்ரமன் ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பர்த்மார்க். சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த ஷபீர் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மிர்னா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமும் வரும் 23-ம் தேதி வெளியாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.