
நடிகர்களின் அரசியல்
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் தமிழ் திரையுலகின் இரண்டு ஜாம்பாவன்களான ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம்தான். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலுக்கு வருவண வருவேன் என்று சொல்லி கொண்டிருந்த ரஜினி ஒரு வழியாக அரசியலுக்கு வந்து விட்டார். அதற்கான அறிவிப்பை கடந்த டிசம்பர்31 ம் தேதி அறிவித்தார். கமலும் தமது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது அரசியல் கருத்துக்களை தெரிவியஹது வருகிறார். மேலும் மாவட்ட வாரியாக தமது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
அரசியல் ஆளுமைகள்
தமிழக அரசியலை ஆட்டி படைத்து கொண்டிருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. இவர் தற்போது உயிருடன் இல்லை. மற்றொருவர் திமுக தலைவர் கருணாநிதி. இவரோ வயது மூப்பின் காரணமாக உடல்நலம் குன்றி சரிவர அரசியல் பணிகளில் ஈடுபட முடியாதவராக இருக்கிறார்.
அரசியல் வாரிசு உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில் திமுகவிலிருந்து ஒரு வாரிசு அரசியலில் இறங்க போவதாக அறிவித்துள்ளார். அவர் வேறு யாருமல்ல திமுக செயல்தலைவர் மு க ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் தான். தனது தாத்தா அரசியல் ஜாம்பவானாகவும் தனது தந்தை அரசியல் தீவிரமாக இறங்கி செயல்பட்டு கொண்டிருந்தாலும், இத்தனை நாள் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
ஹீரோவாக அறிமுகம்
திரையுலகில் கால் பதித்து தயாரிப்பாளராக ஜொலித்து கொண்ட இவர், ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கதிர்வேலன் காதல் ,மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் ஓரளவு வெற்றியை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது இவரின் "நிமிர்" படம் நாளை ரிலீஸ் ஆகிறது.
சினிமாவுக்கு முன் அரசியல்
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் இணையதளம் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தான் ஏற்கனவே திமுகவில் இருப்பதாகவும், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தலின் போது திமுக தலைவர் கருணாநிதி, மு.க ஸ்டாலின், துரை முருகன் உள்ளிட்டோருக்கு வாக்குகள் சேகரித்துள்ளதாகவும், ஆனால் சினிமாவில் நடிக்க தொடங்கிய பின், அரசியலை விட்டு விலகி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நேரம் நெருங்கிவிட்டது
மேலும் நடிகர்கள் பலர் அரசியலுக்கு வருவதாக அறிவித்து வருகின்றனர். எனவே தானும் தீவிர அரசியலுக்கு வரும் நேரம் நெருங்கி விட்டதாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவேன்
இந்நிலையில் ஆலந்தூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியின் கலந்துக்கொண்டு, உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களின் முன் உரையாற்றினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் பிறந்ததிலிருந்து அரசியலில் இருப்பதாகவும், திமுக வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.
ஆளாளுக்கு அரசியலுக்கு வருகிறார்கள். இவர் பிறப்பிலேயே அரசியல் வாரிசு என்பதால், அரசியலில் ஜெயிப்பாரா, மாட்டாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.