பிரபல நடிகரின் பேரன் ஆரியன் அறிமுகமாகும் “கருத்துக்களை பதிவு செய்”

 
Published : Jan 24, 2018, 08:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
பிரபல நடிகரின் பேரன் ஆரியன் அறிமுகமாகும் “கருத்துக்களை பதிவு செய்”

சுருக்கம்

actor ssr grandson introduce karuthukkalai pathivu sei

ஜித்தன் 2 , 1 AM படங்களை தயாரித்த RPM சினிமாஸ் அடுத்ததாக தயாரிக்க உள்ள திரைப்படம் “கருத்துக்களை பதிவு செய்”.

இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆரின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார்.

கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர்.   இவர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான 'யா யா' படத்தை இயக்கியதுடன் விரைவில் வெளி வர உள்ள 'பாடம்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை இயகுகிறார் ராகுல். 

இந்த படம் பற்றி இயக்குனர் ராகுலிடம் கேட்ட போது...

இது இன்று நடந்து கொண்டிருக்கும் உண்மை கதை. சோஷியல் மீடியா என்றழைக்கப் படும் சமூக வலை தளங்களினால் தவறான பாதைக்குள் போகும் இன்றைய இளைய தலைமுறையினர் சந்திக்கும் ஆபத்துக்களை விவரிக்கும் படம் தான் 'கருத்துக்களை பதிவு செய்'..

படப்பிடிப்பு சென்னையில் துவங்கி ஒரே கட்டத்தில் நடைபெற்று, ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இன்றைய கால கட்டத்திற்கு அவசியமான படமாக இது இருக்கும் என்றார் இயக்குனர் ராகுல்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!